தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி வந்தால் பல்வேறு வாக்குறுதி வழங்கப்பட்டன. அதில் நீட் தேர்வுக்கு தடை வேறு பல வாக்குறுதிகளை அதில் சிலிண்டருக்கு 100 குறைப்பு, மகளீருக்கும் மாதம் 1000 ருபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே முதியோருக்கு 1000 ருபாய் வழங்கப்பட்டது அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாயாக வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முன் தாங்கள் தேர்தல் அறிக்கையில் மாநில அரசுக்கும் வரும் வரி வருவாயில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்றார்கள் அதையும் செய்யவில்லை! இன்று மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறது.
சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு விதங்களாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, மாவட்டம் தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்தி, மக்களின் கலந்துரையாடல் நடத்தியதுடன், அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக வாங்கினார். அந்த மனுக்களை வாங்கி ஒரு பெட்டிக்குள் போட்டு, அந்த சாவியை தானே வைத்துக் கொள்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் மக்களிடம் பெறப்பட்ட இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் மின்வெட்டு மும்முனை மின்சாரம் இல்லலாமல் தவிக்கும் விவசயிகள் இதை பற்றியும் சட்டமன்ற கூட்ட தொடரில் பேசவில்லை
மேலும் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட 5 சவரன் நகை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசாசாரத்திலும், அவர்களது தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டு இருந்தது. இதற்காக ஏராளமான விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் நகை அடமானம் வைத்து இருக்கிறார்கள்.
நகை அடமானம் வைத்து ஆறுமாதங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகையை மீட்க வேண்டும் இல்லையெனில் அதற்கான வட்டி அசலில் சேர்க்கப்படும். ஒவ்வொரு விவசாயி ஒரு வருடமாக நகை அடமானம் வைத்து தள்ளுபடி வரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்பாடுகள் இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு மூட்டை சிமெண்ட் விலை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது. அது இப்போது 520 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. மணல் கம்பி அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது இதுவும் திமு ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வந்துள்ளது. மேலும் இரண்டு மாத காலமாக ஊரடங்கு மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனவால் பாதிக்கபட்டவர்கள் இறந்தவர்கள் என அனைத்து எண்ணிக்கையிலும் குளறுபடி என சிக்கியுள்ளது திமுக அரசு, மேலும்
இதை அனைத்தையும் மறைக்க ஊடகங்கள் வாயிலாக நிதி அமைச்சர்பெட்ரோல் பேட்டி மின்சார துறை அமைச்சர் அணில் பேட்டி . மேலும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என அறநிலையதுறை அமைச்சர் பேட்டி என ஒவ்வென்றாக வைரல் ஆனது. இதையடுத்து சட்டமன்றத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்லி புது வகையாக மக்களை ஏமாற்ற தொடங்கியது திமுக அரசு. ஒன்றிய அரசு என்பதை அழுத்தமாக கூறி ஊடங்கங்களுக்கு தீனி போட்டு மக்கள் பிரச்சனைகளை திருப்பியது, இதன் ஒரு படி மேல் சென்று கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ வாயிலாக ஜெய் ஹிந்த் பிரச்சனையை உருவானது. ஜெய்ஹிந்த் எனக் குறிப்பிட்டாமல் தமிழக கவர்னர் உரை முடித்ததற்கு கொங்கு வேளாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் பாராட்டுத் தெரிவித்து, ஜெய் ஹிந்த் என்பதை கேவலமாக சித்தரித்து, தமிழக முதல்வர் முன்னிலையில் பேசியுள்ளார். இது பற்றி எரிந்தது. மக்களின் மனநிலையை திருப்பியது.
நடந்த சட்டமன்றத் தொடரில் மக்கள் தேர்தல் வாக்குறுதிகள் விலைவாசி பிரச்சனைகள் கொரோனா கட்டுகள் கொண்டுவருவது பற்றி மக்களின் வாழ்வாதாரம் என பல முக்கிய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் ஒன்றியம் மற்றும் ஜெய்ஹிந்த் என்று பேசி திசை திருப்பிவிட்டனர் திமுகவினர்.