உண்மையில் இந்தியா முதல் அலை கொரோனாவில் மாபெரும் வெற்றி அடைந்தது, தடுப்பு மருந்தும் கண்டறிந்து அசத்தியது பின் ஊடகங்களின் பொய்களை நம்பி போராளிகளின் பதாகைகளை நம்பி கொரோனா என்பது ஏதோ ஜலதோஷம் காய்ச்சல் என்பது போல் எண்ணின்னார்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என மத்திய அரசு சொல்லியும் தடுப்பூசி மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்த தொடங்கினார்கள் எதிர்கட்சிகளும் அதன் சார்ந்த ஊடகங்களும்.
இதற்கான பலனை தற்போது அனுபவித்து வருகிறார்கள் மக்கள். தடுப்பூசி பற்றி பேசிய எதிர் கட்சியினர் அனைவரும் முதல் ஆளாக சென்று போட்டு கொண்டார்கள் மக்களோ அவர்கள் பேச்சை கேட்டு தடுப்பூசி என்றால் விஷ ஊசி என்ற அளவிற்கு வந்தார்கள் மத்திய மாநில அரசுகளை குறை மட்டுமே கூறினார்கள்.
எங்கும் பயம் ஒழிந்தது, முககவசம் ஒழிந்தது, கொரோனா அச்சம் நீங்கி பல நூற்றாண்டு ஆனதாக அவர்களே நினைத்து கொண்டார்கள், நாடு சமூகம் பற்றிய சிந்தனையில்லாமல் நாங்கள் பேசுவது தான் நியாயம் என மார்தட்டி கொண்டார்கள் மக்கள்.
சமீபத்தில் இறந்த விவேக் அஞ்சலியின் பொழுது கூடிய ஜனத்துக்கு என்ன கட்டுபாடு இருந்தது? அதில் கொரோனா நோயாளி 4 பேர் இருந்திருந்தால் கூட நிலை என்னாகியிருக்கும்?
செய்வதையெல்லாம் இவர்கள் செய்துவிட்டு பழியினை அரசின் மேல் சுமத்துவது என்பதெல்லாம் எந்த அளவில் நியாயம்.
ஒவ்வொரு நாடும் தடுப்பூசிக்கு ஏங்கி நிற்கும் பொழுது, மில்லியன் பில்லியன் என கொட்டி கொடுத்து ஏங்கி அதுவும் ஊசி கிடைக்க சில மாதங்களாகும் என தவிக்கும் பொழுது இங்கு கையில் இருக்கும் ஊசியினை செலுத்திகொள்ள மாட்டோம் என்பதெல்லாம் எதிர் கட்சிகளின் சதி அதன் விளைவு தான் தற்போது விதியாக மாறிவிட்டது.
அமெரிக்க, ரஷ்ய மக்கள் தொகையினை விட இந்திய மக்கள் தொகை மிக பெரிது அந்த மாபெரும் மக்கள் தொகையில் இவ்வளவு தூரம் கட்டுபடுத்தி வருவதே பெரும் விஷயம்
இப்பொழுதும் முழுவீச்சில் அரசு களம் காண்கின்றது, தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கோரபடுகின்றன, தனியார் மருத்துவமனைகளின் உதவி நாடபடுகின்றது
இது போக ராணுவம் களமிறங்கி ஏகபட்ட முகாம்களையும் மருத்துவ உபகரணங்களையும் கொடுத்து களத்தில் அடியெடுத்து வைக்கின்றது
மோடி அரசு கொரோனா முதல் அலையில் வெற்றிபெறும் பொழுது செய்த தவறு ஒன்றே ஒன்றுதான்
ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசிபோட்டிருக்க வேண்டும்அதை கட்டாயம் ஆக்கிருக்க வேண்டும்.
நிலைமை இவ்வளவு சீரியஸாக இருக்கிறது. மக்களை தூண்டிவிட்டு தேர்தல் முடிந்த கையேடு கொடைக்கானலுக்கு சுற்றுலா மேற்கொண்டார். ஸ்டாலின் மாறன் பிரதர்ஸ் ஐ பி எல் பிசியாகி விட்டார் . மக்களோ கொரோனாவால் மல்லு கட்டி வருகிறார்கள்.