இந்தியா பாகிஸ்தான் போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்கலாம். இதற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை கூட இந்தியா பயன்படுத்தலாம்.இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மட்டும் குறிக்கப்படும். இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும்.
உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும். தேதி முடிவெடுக்கப்படாது. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான் செய்யப்படும்.
இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும். கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தாக்குதல் நடத்தப்படுவது.. தாக்குதல் தினத்தின் 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்படும். தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் ராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கீரின் சிக்னல் கொடுத்துவிட்டார்
இந்த தாக்குதலுக்கு இதற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை கூட இந்தியா பயன்படுத்தலாம். இதனால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஒரு நாட்டையே காலி செய்யும் ஏவுகணை தான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை.இது எந்த அளவிற்கு பலம் வாய்ந்தது என்று இங்கே பார்க்கலாம்.
பிரம்மோஸ் ஏவுகணை அறிமுகம்
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஏவுகணைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாகும். இது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டுத் திட்டமாகும். “பிரம்மோஸ்” என்ற பெயர் இரண்டு நதிகளில் இருந்து வந்தது – இந்தியாவில் உள்ள பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவில் மோஸ்க்வா. இந்த ஏவுகணைகளில் ஏவுகணை நவீன போர் யுக்தியில் இந்தியாவுக்கு மிக அதிக பவரை வழங்க கூடிய ஏவுகணை ஆகும்.
பிரம்மோஸ் ஏன் அதிக சக்தி வாய்ந்தது?
அதிவேக வேகம்: பிரம்மோஸ் மாக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்க கூடியது(ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு). இது சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். இந்த வேகம் காரணமாக எதிரி நாடுகள் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம்.உயர் துல்லியம்: தாக்கப்பட்ட வேண்டிய இலக்கு நகர்ந்தாலும், பிரம்மோஸ் அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும். இது எதிரி கப்பல்கள், பதுங்கு குழிகள் மற்றும் இராணுவ தளங்கள் உட்பட தரை மற்றும் கடல் இலக்குகளை எளிதாக தாக்க முடியும்.
நீண்ட தூரம்: முதலில் இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. ஆனால் இப்போது,புதிய மாற்றங்கள் மூலம் 400 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியும். சில மேம்படுத்தப்பட்ட அப்டேட் மாடல்கள் 500 கிலோமீட்டருக்கு அப்பால் செல்லும் திறன் கொண்டது..ஏர் (Su-30MKI போன்ற போர் விமானங்கள்)
கடல் (போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்)
இந்த மும்முனை தாக்குதல் காரணமாக.. போர் மோதலின் போது ஏவுகணை எங்கிருந்து வரும் என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
ஹெவி போர்ஹெட்:
இந்த ஏவுகணை கனமான முன்பகுதியை கொண்டது. அதாவது ஹெவி போர்ஹெட். 200 முதல் 300 கிலோ வரியா எளிதாக சுமந்து செல்ல கூடியது. இது பெரிய கட்டமைப்புகள், எதிரி போர்க்கப்பல்கள் அல்லது முக்கியமான பாதுகாப்பு வசதிகளை ஒரே தாக்குதலின் மூலம் அழிக்க முடியும்.
ஸ்டெல்த் முறை மற்றும் ஸ்மார்ட் வழிகாட்டுதல்:
இது ரேடார் கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக தரை அல்லது கடல் மேற்பரப்புக்கு அருகில் தாழ்வாகப் பறக்க முடியும். இது தடைகளைத் தவிர்க்கவும், சரியான இலக்கை அடையவும் உதவும். அதேபோல் இதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஜிபிஎஸ் முறையில்.. மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளை இது பயன்படுத்தும்.
இந்தியா இதை பயன்படுத்த முடிவு செய்தால் ஏன் பாகிஸ்தானால் தடுக்க முடியாது?
இதன் வேகம் காரணமாக பாகிஸ்தான் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் இதை தடுக்க முடியும் .
பாகிஸ்தானின் தற்போதைய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் பிரம்மோஸ் போன்ற ஏவுகணையை இடைமறிக்கும் அளவுக்கு வேகமாகவோ அல்லது மேம்பட்டதாகவோ இல்லை. இது சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிப்பதால், இது மிகக் குறைந்த எதிர்வினை நேரத்தை மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்திற்கு அளிக்கிறது.
குறைந்த விமானப் பாதை
பிரம்மோஸ் தரை அல்லது கடலுக்கு அருகில் பறக்கிறது. அதனால் ரேடாரில் கண்டறிவது கடினம். அதைக் கண்டுபிடிக்கும் நேரத்திற்கு முன்பே இந்த ஏவுகணை இலக்கை தாக்கி விடும்.
பல முனை தாக்குதல்
நிலம், கடல் அல்லது ஆகாயத்தில் இருந்து ஏவ முடியும் என்பதால், இந்த ஏவுகணை எங்கிருந்து வரும் என்பதை பாகிஸ்தானால் எளிதில் யூகிக்க முடியாது. இது முன்கூட்டியே சரியான பாதுகாப்பு அரணை உருவாகுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது.
அதிக துல்லியம் மற்றும் சேதம்
ஒரு பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டாலும், அது ராணுவ இலக்குகள் அல்லது கப்பல்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். குறைந்த எண்ணிக்கையிலான பிரம்மோஸ் ஏவுகணைகள் மொத்தமாக ஒரு போரின் முடிவை மாற்றும் திறன் கொண்டது.
பாகிஸ்தானிடம் சமமான ஆயுதம் இல்லைபிரம்மோஸ் போன்ற வேகமான அல்லது மேம்பட்ட ஏவுகணை அமைப்பு பாகிஸ்தானிடம் தற்போது இல்லை. அதன் பெரும்பாலான அமைப்புகள் மெதுவாகவே உள்ளது .
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒருவேளை போர் வெடித்தால், மனிதவளம், பாதுகாப்பு பட்ஜெட் மற்றும் நிலம், வான் மற்றும் கடல் படைகள், இராணுவ சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கும். இதில் பிரம்மோஸ் முக்கிய பங்கு வகிக்கும். பிரம்மோஸ் ஏவுகணை வெறும் ஆயுதம் அல்ல – இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ராணுவ சக்தியின் அடையாளமாக உள்ளது. வேகம், துல்லியம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவை காரணமாக இது உலகின் வலிமையான ஏவுகணைகளில் ஒன்றாக உள்ளது. இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் இந்தியா அதைப் பயன்படுத்த முடிவு செய்தால், பாகிஸ்தான் உட்பட – எந்தவொரு நாட்டிற்கும் அதைத் தடுப்பது, மறித்து தாக்குவது மிகவும் கடினமாக இருக்கும்.