தொடர்ந்து 10-வது நாளாக, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது.

கொவிட் 19-க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை, 10 லட்சத்திற்கும் குறைவாக பராமரிக்கும் போக்கைஇந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது

தொடர்ந்து 10வது நாளாககொவிட்டுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்குணமடைவோர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 85,376 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 52,73,201 ஆக உள்ளது. குணமடைவோர் வீதம் 83.53%-மாக உள்ளது.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குணமடைந்தவர்களில் கடைசி 10 லட்சம் பேர் கடந்த 12 நாட்களில் குணமடைந்தவர்கள்.

குணமடைந்தவர்களில் 77% பேர், 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 76% பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,181 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 82% பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

Exit mobile version