இத்தனை வருடங்கள் எங்களை மகிழ்வித்து, இந்திய தேசத்தை பல தருணங்களில் தலைநிமிர்ந்து செய்த மன்னவனே..
இந்தியா கனவிலும் நினைக்காத அளவு கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் வெற்றி வாங்கி தந்து, நம் தேசத்தை உலகறிய செய்த செயல் வீரனே..
உன்னை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்து, தங்கள் ஈன புத்தியை உலகிற்கு வீணர்கள் பறைசாற்றிக் கொண்ட போதும், அனைவருக்கும் உன் வெற்றிகளை பதிலாய் அளித்த எங்கள் சக்கரவர்த்தியே..
கடைசி இரண்டு வருடங்களாக, அணியில் உள்ளவர்களுக்கு மைதானத்தில் உன் வித்தையை, வாய் வார்த்தைகளாக அல்லாமல், உன் செயல்பாடுகளால் கற்றுக் கொடுத்த மேதையே..
பேட்டிங்-ல் நீ பரிமளிக்காத போதும், உன் இருப்பு மைதானத்தில் சக வீரர்களுக்கும், முக்கியமாக அணி தலைவனுக்கு மிகப்பெரும் நம்பிக்கையை அளித்தது இந்த உலகம் கண்ணுற்றது..
அணித்தலைவன் விராட் கோலி, பல ஆட்டங்களில், அணியை உன் பொறுப்பில் விடுத்து, எல்லைக் கோட்டில் நின்று, உன் தந்திரங்களை கற்றார்…
இனி, உனக்கிணையான wicket keeper ஐ இந்த உலகம் காண முடியாது என்பதே உண்மை…
போதும், இனி உன் குடும்பத்துடன் வாழ்வை இனிதே கழிப்பாய்..
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















