உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியினர் தங்களின் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள். அணிகளின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி.இதுவரை 4 போட்டியில் பங்குகொண்டு 4 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடர் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் விராட்கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஒரு நாள் போட்டியில் தனது 48 ஆவது சதத்தை அடித்து சாதனை செய்தார்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது கோலி சதம் அடிக்க தேவையான ரன்கள் 3 என இருந்தது. விராட்கோலி 97 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டு இருந்தார்.அந்த சமயத்தில் அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ சரியாக அம்பயரிங் செய்தார்,
42 ஆவது ஓவரை வீசிய பங்களாதேஷ் அணி ஸ்பின் பவுலர் நசும் அகமது , விராட்கோலி சதம் அடித்து விட கூடாது என்ற எண்ணத்தில் வேண்டும் என்றே லெக் திசையில் வைட் வீசுவார்.அந்த பந்து விராட்கோலி காலில் பட்டு இருந்தால் , லெக் பைஸ் பவுண்டரி சென்று இருக்கும். விராட்கோலி சதம் அடிக்க முடியாமலேயே போயிருக்கும். கோலி மிக நேர்த்தியாக கால்களை நகர்த்தி அது வைட் செல்லட்டும், அப்படி இருந்தாலும் வெற்றி பெற ஒரு ரன் இருக்கே , பார்த்துக்கலாம் என்ற நினைத்தார்.
ஆனால் அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ சரியாக அம்பயரிங் செய்து அது வைட் இல்லை என்று சொல்லுவார்.இதற்கு அடுத்து வீசிய பந்தில் விராட்கோலி சிக்ஸர் அடித்து, தனது சதம் மற்றும் வெற்றி ரன்களை எடுப்பார். என்ன தான் தோழனாக பழகினாலும் கடைசியில் இப்படி ஒரு கேவலமான செயலை பங்களாதேஷ் அணியினர் செய்தது அதிர்ச்சி ஆக்கியது .
முன்னதாக கேஎல் ராகுல் விராட்கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக , 41 ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் ஓடாமல் தவிர்ப்பார். இது நான் தான் செய்தது, விராட்கோலி அப்படி செய்ய சொல்ல வில்லை என்று பேட்டியில் சொன்னார் கேஎல் ராகுல் .
பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தது, ஜடேஜா , சிராஜ், பும்ரா, தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்திய அணி இந்த இலக்கை 41.3 ஓவர்களில் சேசிங் செய்து வெற்றி பெற்றது, விராட்கோலி 103 ரன்கள் , சுப் மன் கில் 51 ரன்கள் , ரோஹித் சர்மா 48 ரன்கள் அடித்தனர்.
பங்களாதேஷ் அணி பவுலர் செய்த காரியத்தை கீழ இருக்க வீடியோல பாருங்க