சி.டி ஸ்கேன்,எம்ஆர்ஐ கருவி மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி

இந்திய தொழில்துறையின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு செயல்திறன் மற்றும் உணர்வுபூர்வமான அணுகுமுறையை பின்பற்ற, 8 ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மருத்துவ சாதனங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கு, ஒரு குறிப்பிடத்தக்க முடிவை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் எடுத்துள்ளது.

இந்த கீழ்கண்ட மருத்துவ பொருட்கள், மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒழுங்குப்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ( மருத்துவ பொருட்கள் விதிமுறைகள் 2017ன் கீழ் 2019 பிப்ரவரி 8ம் தேதி பிறப்பித்த உத்தரவு)  முன்பு கூறியிருந்தது:

உடலில் பொருத்தக்கூடிய அனைத்து மருத்துவ சாதனங்கள்

சி.டி ஸ்கேன் கருவி

எம்ஆர்ஐ  கருவி

டெஃபிபிரிலேட்டர்கள்

பிஇடி சாதனம்

டையாலிசிஸ் இயந்திரம்

எக்ஸ்-ரே இயந்திரம் மற்றும்

எலும்பு மஜ்ஜை செல்-ஐ பிரிக்கும் கருவி 

இந்த  உத்தரவுப்படி, மேற்கண்ட பொருட்களை இறக்குமதி/உற்பத்தி செய்ய,  இறக்குமதியாளர்கள்/ உற்பத்தியாளர்கள் இறக்குமதி/உற்பத்திக்கான உரிமத்தை மத்திய உரிமம் ஆணையம் அல்லது மாநில உரிமம் ஆணையத்திடம் இருந்து  2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் பெற வேண்டும்.

இந்த மருத்துவ உபகரணங்களின் விநியோக சங்கிலி தொடர்வதையும் மற்றும் கிடைப்பதையும் உறுதி செய்ய, புதிய ஒழுங்குவிதிமுறையை சுமூகமாக அமல்படுத்தும் வேளையில், தற்போதுள்ள இறக்குமதியாளர்கள்/உற்பத்தியாளர்கள் இந்த மருத்துவ பொருட்களை ஏற்கனவே இறக்குமதி/உற்பத்தி செய்திருந்தால், மருத்துவ பொருட்கள் விதிமுறை 2017-ன் கீழ், மத்திய உரிம ஆணையம் அல்லது மாநில உரிம ஆணையத்திடம் அதற்கான உரிம விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த விண்ணப்பங்கள் செல்லுபடியானதாக கருதப்படும். இந்த உத்தரவு பிறப்பித்த தேதி்யிலிருந்து 6 மாதங்கள் வரை அல்லது விண்ணப்பத்தின் மீது மத்திய உரிம ஆணையம் அல்லது மாநில உரிம ஆணையம் முடிவு எடுக்கும் வரை இதில் எது முன்போ, அதுவரை இறக்குமதியாளர்கள்/உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இறக்குமதி/உற்பத்தி செய்யலாம்.

இது தொடர்பான உத்தரவு,  மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) இணையதளத்தில் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 

Exit mobile version