கடலூர் பாஜக தெற்கு ஒன்றியம் காராமணிக்குப்பத்தில் ஒன்றிய தலைவி சுமதியை சில சமூக விரோதிகள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.
பாஜக அரசின் சாதனை குறித்தும் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தார் சுமதி.
அவர் வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள் அவர்செய்த சுவர் விளம்பரத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் கடலூரில் பரபரப்பான சூழல் காணப்படுகின்றது.
இந்த அநாகரீக செயலை வன்மையாக கண்டித்தும்.
காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் என்று பாஜக கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.