சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் 4 எம்.பி.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, மேலும் கடலூர் திமுக எம்.பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போதுதான் ஜாமின் கிடைத்து வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக மத்திய அமைச்சர் ஆ ராசா கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.கவின் மிக முக்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஆ.ராசா முன்னாள் மத்திய அமைச்சர் டெல்லியில் மிகப்பெரிய நட்பு வட்டாரங்கள் உண்டு காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் என்ற பொருளாதார மேதை க்கே பொருளாதார பாடம் எடுத்தவர். இவர் இவர் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் அதை வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் செய்து வந்தார். கடந்த கால கட்டத்தில் திமுக கருணாநிதியின் நிழலாக வலம் வந்தவர் தான் இந்த ஆ.ராசா.
ஆனால் தற்போது எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத புரியாத ஒன்றாக இருக்கிறது. ஏன் திமுகவினரே தேடி வருகிறார்கள். முக்கியமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதி மக்கள் மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது ஆ.ராசாவை தேடி வந்தார்கள். தற்போது திமுக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா 2ஜி வழக்கில் விடுதலை பெற்றாலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது அதன் ஒரு வழக்கில் அவரை கைது செய்ய மத்திய அரசிடம் அனுமதி கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,
அதனடிப்படையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தற்போதைய நிலையில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆறாத மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். 2015ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது முறைகேடாக சொத்து குவிப்பு , வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சிபிஐ பல இடங்களில் சோதனை நடத்தியது சோதனை நடத்தியதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 28 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் வழக்கை விசாரிக்க மத்திய அரசின் அனுமதியை சிபிஐ கேட்டுள்ளது மத்திய அரசும் விரைவில் அனுமதி அளித்து உத்தரவிட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்ற.
2ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ ராசா கனிமொழி உட்பட பலர் விடுதலை செய்யப்பட்டனர் இதனை எதிர்த்து சிபிஐ மத்திய அமலாக்க இயக்குனரகம் ஆகியவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர் அந்த வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த வழக்கிலும் சிபிஐ போதிய ஆதாரத்துடன் எடுப்பதாகவும் கண்டிப்பாகஆ.ராசா கைது செய்யப்படுவது உறுதி எனவும் சொல்லப்படுகிறது மேடைப்பேச்சாளர் சர்ச்சையில் சிக்கும் ஆனால் சமீபகாலமாக சமீபகாலமாக எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் அமைதியாக இருப்பது இதற்குத் தானா என்று பலரும் வினா எழுப்பி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க கடலூரில் முந்திரி தோட்ட தொழிலாளி கொலை வழக்கில் திமுக பாரளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்கமால் அலைந்து வந்த நிலையில் தற்போதுதான் ஜாமீன் கிடைத்து வெளியில் வந்துள்ளார்;. இவர் மீது தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் இவர் விரைவில் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு என்ற செய்திகளும் வந்துள்ளது. இதன் காரணமாக 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.