தமிழகத்தில் 7 மாதத்தில் விடியதாக அரசாக திமுக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை ரவுடிகளின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. அதை கண்டுகொள்ளாமல் திமுக அரசை விமர்சிக்கும் நபர்களை கைது செய்து வருகிறது திமுக அரசு. பாஜக ஆதரவாளர்கள்களை கைது செய்தும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்ககளாக இருந்தவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு என திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும் தேனியில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில்நடைபெற்றது அப்போது பேசிய சிவி சண்முகம்பாஜக தலைவர் அண்ணாமலையை திமுக அரசால் கைது செய்ய முடியுமா..? என்றும், முடிந்தால் நடவடிக்கை எடுத்து பாருங்கள் என்று திமுகவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
சி.வி.சண்முகம் பேசியதாவது :- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் இருக்கும் அதிகாரிகளின் வீடுகளிலேயே சோதனை செய்வோம். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்திடம் திமுக அமைச்சர் 10 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். அவரது தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகமே ஒரு மர்மதேசம் போல இருந்து வருகிறது. உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் அச்சத்திலேயே பணியாற்றி வருகின்றனர். திமுக ஏதோ ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. எதிர்கட்சியினரை பழி வாங்க வேண்டும் என்று நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது
வெங்கடேசன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த போதில் இருந்து திமுக நெருக்கடி கொடுத்துள்ளது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. வெங்கடாசலம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி தற்கொலைக்கான உண்மை காரணத்தை வெளியில் கொண்டு வரவேண்டும்.
மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு உயர் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை மிரட்டி வருகிறது. மாரிதாஸை கைது செய்த காவல் துறை தமிழகத்தில் நடக்கும் கொலை திருட்டு குற்றங்களை தடுக்காமல் டி.ஜி.பி சைக்கிளில் செல்பி எடுத்து வருகிறார். திமுகவின் மாவட்ட செயலாளர் தான் காவல் கண்காணிப்பளார் என திமுக குற்றம் சாட்டினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை இந்த திமுக அரசால் கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள், சவால் விட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.