கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த ஏரி பகுதியில் இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற சிலர் அங்கு உடம்பில் தீக்காயத்துடன் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர், திருக்கோவிலூர் அருகே உள்ள தேவியகரம் கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஹரி(29) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக திருக்கோவிலூர் போலீசார் அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவரது இருசக்கர வாகனம் மற்றும் அவரது காலனி அந்தப் பகுதியில் மது பாட்டில்கள் இருப்பதால் நண்பர்களுடன் வந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து தகவல் இருந்து திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் நேரில் பார்வையிட்டு விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளார்.
ஏரி பகுதியில் இளைஞர் சடலமாக தீக்காயங்களுடன் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
