நகைக்கடன் பெறும் போது, நகையின் மதிப்பில் 90% சதவிதம் வரை கடனாக பெற்று கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தங்க நகைக்கடன் இதுவரை 75%மட்டுமே வங்கிகள் வழங்கி வருகிறது. தற்போது தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில், பொதுமக்கள் தங்கநகைகளை வங்கிகளில் அடகு வைப்பதன் மூலம் கூடுதலாக பணம் பெற முடியும்.
சாமானிய மக்கள் பெறும் தங்க நகை கடனில், தங்க நகைகளின் மதிப்பில் 90% வரையில் தற்போது கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறுவர். இது மட்டுமில்லாமல் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை ஆர்பிஐ அறிவித்துள்ளது.
அதாவது, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது .ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இல்லாததால் வீடு & வாகன கடன்களுக்கு வட்டி மாற்றம் இருக்காது . தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் அளவை 75% இருந்து 90% வரை வங்கிகள் அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது . சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் அனுமதிக்கவேண்டும்.
கொரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்ட தாக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டிலும் குறைவாகவே இருக்கும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு தலா ரூ. 5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரச்சினையால் நாட்டின் பொருள்கள், சேவைகளுக்கான வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
கடன் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் வரும் நிறுவனங்களுக்கு கடனை திரும்பச் செலுத்த வங்கிகள் கூடுதல் கால அவகாசம் அளிக்கும். வட்டி விகிதமும் குறைக்கப்படும். நிதிச் சிக்கலில் உள்ள நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வர இந்த நடவடிக்கை உதவும். கடன் மறுசீரமைப்பு திட்டத்தை எந்தெந்த துறைகளுக்கு அளிக்கலாம் என்பது தொடா்பாக ஆய்வு செய்ய பிரிக்ஸ் வங்கி முன்னாள் தலைவா் கே.வி.காமத் தலைமையிலான குழுவை ஆா்பிஐ அமைத்துள்ளது