சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டம் தொடர்பாக ஆதரவு எதிர்ப்பு என இரு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் பிரிவினைவாதிகள் புகுந்துவிட்டனர். காவல்துறை மீது கடுமையாக தாக்கப்பட்டனர். இதன் பின் டெல்லி வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன பொதுமக்கள் அவதிக்குள்ளானர்கள். காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்கள். கலவர பூமியாக மாறியது டெல்லி வடகிழக்கு பகுதி.
கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் கடந்த ஞாயிறு முதல் வடகிழக்கு பகுதியில் கலவரம் மூண்டது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 38-யை எட்டியுள்ளது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த இரு சிறப்பு விசாரணைக் குழுவுக்கும் காவல்துறை துணை ஆணையர்கள் 2 பேர் தலைமை வகிப்பார்கள். ஆயுதங்கள், கட்டைகள், கற்களுடன் வன்முறையில் ஈடுபட்டவர்கள், சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள், சூறையாடியவர்கள், குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த கலவரம் தொடர்பாக 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்திற்குப் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 50 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கலவரக்காரர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களை அமைத்து கலவரத்தை ஒருங்கிணைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதே போல் தான் காஸ்மீரில் வன்முறை சம்பவம் நடப்பதற்கு திட்டம் தீட்டப்படும். அதே போல் காவத்துறை மீது கல்வீச்சு என்பதும் காஷ்மீரை நம் கண்முன்னே கொண்டுவந்து போகிறது,
இதன் பின் isis தீவிரவாதம் இருப்பதாக தெரியவந்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்தபப்டும் போராட்டங்கள் பின்னணியில் மிகப்பெரிய சாதி வலை பின்னல் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. அதே போல் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பிரிவினைவாத கும்பல் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் போராட்டங்களை கலவரங்களை தூண்டவும் முயற்சி மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சில கட்சிகளை தங்கள் கைக்குள் கொண்டுவந்துள்ளது,பிரிவினைவாத இயக்கங்கள்.
ஞாயிறன்று தொடங்கிய கலவரத்தால் வடகிழக்கு டெல்லி போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. தேர்வுகள் 4 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.