கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா?

கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா?

நிச்சயமாக இல்லை. சிஏஏ வன்முறைகளுக்கு பிறகும் மோடிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு இன்னும் அதிகரித்து தானே வருகிறது.

அதை சி ஓட்டர் கருத்து கணிப்பும் உறுதிபடுத்துகிறதே. புலம் பெயர் தொழிலாளர்களை வைத்தும் இதையே செய்ய முயன்று பீகார் மற்றும் இதர மாநில இடைத்தேர்தல்களில் பல்பு வாங்கியவர்கள் தானே எதிர்க்கட்சிகள்.

அவ்வாறு இருக்கும் போது மோடி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக அதையே மீண்டும் மீண்டும் கையாளலாம் என்று நினைக்கும் அளவிற்கு இதை தூண்டியவர்கள் ஊக்கை இல்லை.

பின்பு இவர்களின் நோக்கம் தான் என்ன? இந்தியா தொடர்ந்து வன்முறை களமாக இருந்தால் அந்நிய முதலீடுகள் வராது.

தவிர இப்போது அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இந்திய விரோத ஆட்சியாளர்கள். அதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் கலவரக்காரர்களை அடக்க நினைத்தால் என்ன ஆகும்?

வல்லரசு நாடுகளில் இருந்து கண்டன குரலகள் வந்து அந்நிய முதலீடுகள் வராமலே போய்விடும். இதை தான் எதிரிகள் விரும்புகிறார்கள்.

தவிர சீனாவின் நரித்தன செயல்பாடுகளால் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் இடதுசாரி ஆதரவு ஆட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. பிடன், ட்ரூடோ போன்ற லிபரல் சிந்தனையாளர்களால் பாஜக போன்ற வலதுசாரி ஆட்சியாளர்களை ஏற்று கொள்ளவே முடியாது. உலகில் நமக்கு நண்பர்களே இருக்க கூடாது என்பது தான் சீனாவின் எண்ணம்.

உலகின் ஒரே ஹிந்து பெரும்பான்மை நாடு என்கிற அடிப்படையில் இந்தியாவிற்கு ஆதரவு கரம் நீட்ட வேறு ஹிந்து நாடுகளே கிடையாது. அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் பல பல வழிகளில் இந்தியாவிற்குள் நுழைந்து கலவரம் தூண்டிவிடுவதற்கு பயன்படுவதை நூறு சதவிகிதம் தடுத்து நிறுத்த இன்றைய டிஜிட்டல் உலகில் சாத்தியமே இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீக்கியர்கள் மேல் எடுத்த எடுப்பிலேயே பலப்பிரயோகம் செய்தால் சர்வதேச அளவில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். நமது ராணுவத்தில் சீக்கிய ரெஜிமெண்ட் வேறு இருப்பதை நினைத்து பாருங்கள். இந்திரா ஆட்சியில் நடந்தது போல் அப்பாவி சீக்கியர்கள் மத்தியில் மீண்டும் காலிஸ்தான் ஆதரவு வளர்ந்து விடக்கூடாது. அதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

இறுதியாக இந்த பூமியில் இருக்கும் இருநூறு சொச்ச நாடுகளில் இந்தியா என்கிற ஒரே ஒரு நாட்டில் மட்டுமே ஹிந்துக்கள் பெரும்பான்மை. உலக அளவில் ஹிந்துக்கள் கொஞ்சம் பெரிய சைஸ் கொசு. அவ்வளவு தான். மற்ற நாடுகளின் ஆதரவும் உதவியும் இல்லாமல் இயங்கும் அளவிற்கு நாம் ஒன்றும் நூறு சதவிகிதம் தன்னிறைவு பெற்று விடவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு இது வரை நிதானமாக இருக்கிறது. சிஏஏ போராளிகள் கிட்டதட்ட அனைவரும் எப்படி களி தின்கிறார்களோ அதே தான் வரும் காலங்களில் இந்த காலிஸ்தான் காலிகளுக்கும் நிகழப்போகிறது. அதனால் மத்திய அரசை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.

நன்றி ; Krishnan SK

Exit mobile version