நாடாளுமன்றம் கூட்ட தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் எப்போதும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதன் காரணமாக பாஜக தலைவர்கள் திமுக மீது கடும்கோபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் முதலில் 11 மருத்துவ கல்லூரிகளை திமுக தலைவர் முதல்வருமான ஸ்டாலின் திறந்து விடலாம் என்ற எண்ணினார். இது டெல்லிக்கு தெரிந்ததும். அதெப்படி நாங்கள் எல்லாம் செய்வோம் நீங்கள் செய்தது போல் திறந்துவைப்பீர்கள் என டோஸ் விழுந்துள்ளது.
பிரதமர் மோடியை விட அமித் ஷா தான் திமுக மீது கடும்கோபத்தில் உள்ளாராம். பாஜகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது திமுக. அதன் ஒரு பகுதியாக முதலில் பிரதமரை அழைத்தது .அமித் ஷாவை சந்தித்து அவரையும் சமாதானபடுத்தலாம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் பாலு தலைமையிலான டீம் பல முயற்சிகளை கையாண்டது. பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி க்குள் கொண்டுவர திமுக ஆதரவளிக்கும் மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கும் என பேட்டியெல்லாம் கொடுத்தார்,ஆனால் அமித்ஷா அசைந்து கொடுக்கவில்லை.டி.ஆர்.பாலு தலைமையிலான டீமை அலுவலகத்தில் காக்கவைத்து விட்டு அவர் வெளியே சென்றுவிட்டார்..
மேலும் சில மாதங்களாக எப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்தாலும், ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி சபையை முடக்கி வருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது. இந்த முறையும் தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் முழுமையாக சபையை முடக்கின.எதிர்க்கட்சியினர் என்ன செய்தனரோ, அதை தமிழகத்திலும் செய்ய, பா.ஜ., முடிவெடுத்து விட்டது.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் பேசியுள்ளார். தமிழக சட்டசபை விதிகள் குறித்து நன்கு ஆய்வு செய்யும்படி கூறியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபையிலும் பா.ஜ.க – எம்.எல்.ஏ.,க்கள் இதே முறையை பின்பற்ற வேண்டும் என அண்ணாமலைக்கு, நட்டா ஆலோசனை வழங்கியுள்ளாராம்.
பெட்ரோல், டீசல் விலையை குறை, வெள்ள நிவாரணத்தை அதிகப்படுத்து, பொங்கல் பணம் எங்கே’ என, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் பதாகைகளை ஏந்தியபடி தமிழக சட்டசபையின் மைய பகுதியில் கூச்சலிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கும் இது குறித்து கூறப்பட்டுள்ளது. அண்ணாமலை, அ.தி.மு.க.,வினருடன் ஆலோசனை செய்து, பார்லிமென்ட் முடக்கத்துக்கு பதிலடி தர திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டசபைக்குள்ளும், வெளியிலும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., – எம்.எல்.ஏ., க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க உதயநிதி துணைமுதல்வராக்கும் முயற்சியை ஸ்டாலின்கைவிடவில்லை என்றால் திமுகவிற்கு பல செக் வைக்கவும் டெல்லி தயாராக உள்ளது.