மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கும் தேவேந்திர பட்னாவிஸ்,மத்திய அமைச்சகராகும் ஏக்நாத் ஷிண்டே !

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்,அம்மாநிலத்தில் பாஜக,சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி),தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில்,ஓட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலு,மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ்தாக்கரேவின் சிவ சேனா 20 இடங்களிலும், சரத்பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.

தற்போது ஆளும் பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் உள்ளனர்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்,மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில்,குறிப்பாக பாஜக 132 இடங்களில் தனிப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமரை சந்தித்த சிவசேனா எம்பிக்கள் !

இந்நிலையில் ஏக்நாத் சிண்டேவின் சிவசேனாவை சார்ந்த 7 லோக்சபா எம்பிக்களில்,4 எம்பிக்கள் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார்கள்எதற்காக அவர்கள் தனியாக மோடியை சந்திக்க வேண்டும்?என்று மராட்டிய ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.ஒருவேளை அவர்கள் சிவசேனாவில் இருந்து விலகி பிஜேபியில் இணையலாம்.

மகாராஸ்டிராவில் இப்பொழுது உள்ள நிலையை முன்வைத்து குறைந்தது 15 லோக்சபா எம்பிக்களை பிஜேபிக்கு கொண்டு
வரமுடியும்.கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகின்றது.

பட்னாவிஸ்-சிண்டே இடையே இடைவெளி !

தேவேந்திர பட்னாவிஸ்-ஏக்நாத்சிண்டே இடையே இடைவெளி பெரிதாகி விட்டது.நேற்று ஒரு விழாவில் பங்கேற்க வந்த கவர்
னர் சி.பி ராதா கிருஷ்ணன் அவர்களை வரவேற்க இரண்டு பேரும் வந்து இருந்தார்கள்.அதில் ஆளுக்கு ஒரு திசையில் நின்று
கவர்னரை வரவேற்கிறார்கள்.ஏக்நாத் சிண்டேவின் முகத்தில் முதல்வர் பதவியை இழக்கும் சோகமும் தேவேந்திரபட்னாவிஸ் மீதுள்ள வெறுப்பும் தெரிந்துள்ளதுஎன கூறப்படுகின்றது.

ஏக்நாத் சிண்டேவிற்கு 2 ஆப்சன் வழங்கிய பாஜக !

பாஜக ஏக்நாத் சிண்டேவிற்கு 2 ஆப்சன்களை அளித்து இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றன.அதில் முதல் ஆப்சன் துணை முதல்வர்,இரண்டாவது ஆப்சன் மத்திய அமைச்சர்,துணை முதல்வர் பொறுப்பு என்றால் பெயருக்கு தான் இருக்க முடியும் மத்திய அமைச்சர் என்றால் காபினெட் அமைச்சராக இருந்து,இந்தியா முழுவதும் வலம் வர முடியும்.இரண்டில் எதை ஏற்றுக்கொள்கிறார் என்று பார்ப்போம்.

Exit mobile version