ஸ்டாலினை புகழ பொய் பேசி மாட்டிக்கொண்ட தனுஷ்… உருட்டலாம் இந்த அளவிற்கா உருட்டுவது.. நெட்டிசன்கள் சம்பவம்!

தனுஷ்

தனுஷ்

தமிழ் சினிமாத்துறையில் எந்த ஆட்சி வருகிறோதோ இல்லையோ திமுகவுக்கு சாதகமாக பேசுவது தான் வழக்கம், அதிமுக ஆட்சியில் எந்த சிறு பிரச்சனை என்றாலும் உடனே குரல்கொடுத்து அதை பூதகரமாக்கி விடுவது தான் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வேலையாக இருந்தது.ஜெயலலிதா இருக்கும் வரை அனைத்தையும் மூடி கொண்டு இருந்த சில சினிமாகார்கள் ஜெயலலிதா இறந்தவுடன் தங்களின் வீரத்தை காட்ட ஆரம்பித்தார்கள். இது தான் தமிழ் சினிமாக்காரர்களின் வீரம். அதுவும் இந்த சூர்யா,நாசர்,சிவக்குமார் சத்யராஜ் போன்றவர்கள் தான் இதில் முதலிடம்.

இந்த நிலையில் , கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ‛கலைஞர் 100′ நிகழ்ச்சியில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினியின் மருமகன் தனுஷ் பேசுகையில் முதல்வரை புகழ்வதாக நினைத்து பொய்களை கட்டவிழ்த்து விட்டார். “‘அசுரன்’ படம் பார்த்துட்டு முதல்வர் என்னைத் தொடர்புகொண்டு, ‘பிரதர் நான் ஸ்டாலின் பேசுறேன்’ என்றார். அவர் பிரதர் என்று அழைத்த அந்த யதார்த்தமான அணுகுமுறை. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது முதல்வர் என்றாலே வானத்தில் ஒரு எட்ட முடியாத நட்சத்திரமாக இருக்க வேண்டும் எனபது போல் இல்லாமல், மிகவும் எளிமையானவராக, எளிதில் அணுகக்கூடிய ஒருவராக, நம்மில் ஒருவராக இருக்கும் முதல்வரை பார்க்கும்போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ஆனால் அசுரன் படம் வந்தப்போது ஸ்டாலின் முதல்வராக இல்லை, அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் தான் முதல்வராக இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தை பார்த்துட்டு அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போட்ட டிவிட் தான் தமிழகத்தில் பஞ்சமி நில பிரச்சனை ஆரம்பித்தது. ஆக்கிரமிப்பு செய்துள்ள தலித் பஞ்சமி நிலங்களை பற்றிய விவாதங்கள், வழக்குகள் வந்தது.
அந்த முரசொலி மூலபத்திர விஷயமும் அப்போதுதான் வந்தது.

மேலும் மேடையில் பேசிய எந்த ஒரு நடிகரும் “பராசக்தி” “மனோகரா” முதல் “உளியின் ஓசை” வரை அய்யா கலைஞரின் நூற்றாண்டு விழாவில் ரீமேக் செய்யவேண்டும் அதில் நாங்கள் நடிக்கவேண்டும் என சொன்னார்களா என்றால் இல்லை அய்யா உதயநிதியாரே., அய்யா கலாநிதி மாறனே தயவுசெய்து கலைஞரின் வாழ்க்கையினை படமாக எடுங்கள் நாங்கள் நடிக்கின்றோம் என எந்த ஒரு நடிகரும் சொல்வதற்கு வாய் வரவில்லை என்றால் இல்லை ஆக நூற்றாண்டு விழா என ஒன்றை வைத்து இன்னொரு கருணாநிதி வேண்டவே வேண்டாம் இன்னொரு முறை அவரின் வசனத்தை தமிழகம் கேட்கும் கொடுமை வேண்டவே வேண்டாம் என உலகுக்கு அறிவித்துவிட்டார்கள்.

Exit mobile version