கோடை வெயில், அக்னி நட்சத்திரம், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் என்ற வார்த்தைகளைக் கேட்டு பழகிப்போன நம்மை தற்போது வெப்ப அலை, பருவமழை மாற்றம், மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் வானிலை ஆய்வாளர்கள் பயமுறுத்தி வருகின்றனர். அதை ஒருப க்கம் சமாளித்து வந்தாலும், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தற்போது தலைதூக்கத் தொடங்கி விட்டது.
திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா அரசிடமிருந்து விலிருந்து தண்ணீர் வாங்குவதற்கு திராணி இல்லாத அரசாக தமிழக அரசு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகம் முழுவதும் அணை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போனதால், குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி, குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த துவங்கி விட்டனர்.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாதா..? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- நிரந்தர தீர்வை நோக்கிய ஒரு தொலைநோக்கு திட்டத்தையாவது இதுவரை திமுக அறிவித்துள்ளதா..?. மழைநீர் சேகரிக்க நீர்நிலைகளை தூர்வார, சீரமைக்க கவனம் செலுத்தாததே நீர் பற்றாக்குறை ஏற்பட காரணம்.
புதிய நீர்நிலை உருவாக்குதல், தடுப்பணைகள் கட்டினால் அடுத்து வரும் மழைக்காலத்தில் நீர் சேமிக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை காங்கிரசிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின், எனக் குறிப்பிட்டுள்ளார்.