இந்தியாவை மின்னணுத் துறையில் மேம்பட்ட சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் முயற்சியில் உருவாக்கப்பட்ட முக்கிய முன்முயற்சியான டிஜிட்டல் இந்தியா திட்டம், 2021, ஜூலை 1 அன்று, 6 வருடங்களை நிறைவு செய்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தனது சேவைகள், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல், பொது மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற செயல்களால் புதிய இந்தியாவின் மிகப்பெரும் வெற்றித் திட்டங்களுள் ஒன்றாக இன்றுவரை விளங்குகிறது.
சராசரியாக மாதம் 357 கோடி பரிவர்த்தனைகள் (UPI – 280 கோடி) டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன. ஆக ஒரு நாளைக்கு 10~12 கோடி பரிமாற்றங்கள். RTGS இல்லாமல் மாதம் ரூ.10 இலட்சம் கோடி மதிப்புள்ள
பரிவர்த்தனைகள் இலக்கை ஒட்டி வங்கிக் கணக்கில் நடைபெறுவது சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாதது.
கறுப்பு பணம் என்று செல்லப்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறும் போது கந்து வட்டி ஒழியும். குறைந்த வட்டியில் சிறு வணிகர்களுக்கு கடன் கிடைக்கும். எப்படி திரும்பச் செலுத்துவாய்? வருமான வரி கணக்கு எங்கே ? GST தாக்கல் எங்கே என்று கேள்வி எழாது.அன்றாட பரிவர்த்தனைகளே தினசரி வர்த்தகத்தை அளவிட போதுமான காரணியாக இருக்கும்.
சாலையோர சிறு, குறு வணிகர்களுக்கு அடமானமில்லாமல் ரூ.10000 கடன் வழங்க #PMSVANidhi எனும் திட்டம் ஊரடங்கு 1.0 தளர்விற்குப் பின் அறிவிக்கப்பட்டது.அந்தந்த ஊரில் உள்ள உள்ளாட்சி அமைப்பு இவர்களுக்கான சான்றிதழையும், பரிந்துரைக் கடிதமும் (LoR) கொடுத்தால், ஆதார் + மொபைல் + வங்கி இணைப்புள்ள கணக்கில் கடன் வழங்கப்படும்.
இது போன்ற வாய்ப்புகள் இல்லாமல் இவர்கள் கந்து வட்டியில் மாட்டினால் மீள்வது கடினம். தற்போது சுமார் 25 இலட்சம் பேர் இதன் மூலம் கடன் உதவி பெற்றுள்ளனர்.பீம், பே டி எம், கூகுள் பே போன்ற UPI பேமண்ட் மூலம் பரிவர்த்தனை செய்தால் கூடுதல் கடனும், தள்ளுபடியும் வழங்கப்படும்.இதைத் தான் பல வருடங்களாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தாக்கம் நடந்து விட்டது. இதன் மூலம் பலருக்கும் நன்மை பரவும்
டிஜிட்டல் இந்தியா திட்டம், 2021, ஜூலை 1 அன்று, 6 வருடங்களை நிறைவு செய்தது இது குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார் அவர் பேசுகையில்
டிஜிட்டல் இந்தியா இயக்கமானது கொரோனா காலகட்டத்தில் நம் நாட்டுக்கு உதவி உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஊரடங்கின் காரணமாக தனது குடிமக்களுக்கு வளர்ந்த நாடுகளே உதவித் தொகையை விநியோகிக்க முடியாத நிலையில் இருந்த போது, இந்தியா தனது குடிமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக கோடிக்கணக்கான ரூபாயை செலுத்தியது. டிஜிட்டல் பரிமாற்றங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வந்தன. பிஎம் கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.1.35 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது. அதே போன்று டிஜிட்டல் இந்தியா திட்டமானது ஒரே தேசம், ஒரே எம்எஸ்பி என்பதையும் சாத்தியமாக்கி உள்ளது.
டிஜிட்டல் இந்தியாவுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிக அளவிலும் விரைவாகவும் ஏற்படுத்தித் தருவதற்கு மிக அதிக அளவிலான முக்கியத்துவம் தரப்பட்டது என்று பிரதம மந்திரி தெரிவித்தார். 2.5 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலமாக தொலைதூர பகுதிகளுக்கும் இணையம் சென்று சேர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாரத் நெட் திட்டத்தின் கீழ் போர்க்கால அடிப்படையில் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிஎம் வாணி (PM WANI) மூலமாக, இணைப்பு புள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சிறப்பான சேவைகளையும் கல்வி கற்கும் வசதியையும் கிராமப்புற இளைஞர்கள் பெறுவதற்கு அதிவேக இணைய வசதியோடு தொடர்பு கொள்ள முடியும். நாடு முழுவதும் குறைந்த விலையில் மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் டிஜிட்டல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கை அடைவதற்காக உற்பத்தியோடு தொடர்புடைய மானியங்கள் மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சுயசார்பு பாரதத்துக்கான கருவியாக டிஜிட்டல் இந்தியா இருக்கும் டிஜிட்டல் இந்தியா. கடந்த 6-7 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.