Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான்.

Oredesam by Oredesam
July 11, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, புள்ளி விவரப்பாதுகாப்பு மற்றும் தனி நபர் ரகசியங்களை மீறுவதாக அமையக்கூடாது.

எனினும், சில நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.இத்தகைய நிறுவனங்கள் சில செல்போன் செயலிகள் வாயிலாக, அவற்றை பயன்படுத்துவோரின் விவரங்களை சட்ட விரோதமாக திருடுவதுடன், அவற்றை வேறு சிலருக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இதுபோன்ற புள்ளிவிவரத் தொகுப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கக்கூடும்.

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லையில் சீன அத்துமீறல்கள் நடந்து வரும் வேளையில், இந்தியாவில் சீனச் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அண்மைக்காலத்தில் மளிகைப்பொருள்கள் கொள்முதல் (பிக் பேஸ்கட்), உணவு விநியோகம் (சொமாட்டோ மற்றும் ஸ்விகி), பயண டிக்கெட் முன்பதிவு ( மேக் மை ட்ரிப்) போன்ற சீனச் செயலிகள் இந்தியாவில் மிக ஆழமாகக் காலூன்றி உள்ளன.

மின்னணு வர்த்தகம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்றவற்றிலும் சீனச் செயலிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது.சீனாவால் அல்லது அந்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இத்தகைய செயலிகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றன.

சீனாவின் இந்தச் செயலிகளை இந்திய மக்கள் பெருமளவுக்கு சார்ந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.

இந்நிலையில், நாட்டின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிந்ததையடுத்து, சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த அழைப்பு சர்வதேச அளவிற்குச் சென்றிருப்பதுடன், பிற நாடுகளிலும் டிக் டாக் போன்ற சீனச் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோன்ற செயலிகள் மூலம் சீன அரசு, அந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பல லட்சக்கணக்கானோரை உளவு பார்த்து வருகிறது. பிறரைத் தொடர்பு கொள்வதற்கு வாட்ஸ் அப் எனப்படும் அமெரிக்க செயலியையும், வீடியோகால் மூலம் பேசுவதற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சீன நாட்டவரால் நடத்தப்படும் ஜும் செயலியையும் பயன்படுத்தி வருகிறது. சீனாவின் 59 செயலிகளைத் தடை செய்வதற்குக் கூட இந்திய அரசு கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற வெளிநாட்டுச் அமைப்புகளைத் தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இவற்றுக்கு மாற்றாக மிகவும் பயனுள்ள வெளிப்படையான, செயல்பாடு மிகுந்த மற்றும் பாதுகாப்பாக செயலிகளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டயமாகியுள்ளது.

இதுபோன்ற இந்தியச் செயலிகளைப் பயன்படுத்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக, டிக் டாக், இன்ஸ்ட்ராகிராம், யூ டியூப் செயலிகளுக்கு பதிலாக இந்தியாவின் மித்ரன் (Mitron) மற்றும் சிங்காரி (Chingari) செயலிகளையும், ஷேரிட்டுக்கு பதிலாக ஜியோ ஸ்விச், Baidu Map மற்றும் கூகுள் மேப்பிற்கு பதிலாக மை மேப் இந்தியா மூவ், விளையாட்டுக்கான பப்ஜி, கிளாஸ் ஆப் கிங்ஸ் போன்றவற்றுக்கு பதிலாக லூடோ கிங், சுடோகு கிங் போன்ற செயலிகளும், வர்த்தகத்திற்கான பிளிப் கார்ட், ஸ்னாப் டீல், அமேசான் போன்றவற்றுக்கு பதிலாக Tata Cliq, Reliance Digital / Jio Mart போன்ற இந்தியச் செயலிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதே போன்று, தடை செய்யப்பட்ட 59 சீனச் செயலிகளில் 54 செயலிகளுக்கு மாற்றாக இந்தியச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்திக்கு புத்துயிர் ஊட்டவும், தற்சார்பு நிலையை எட்டவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது போன்ற முயற்சிகள், நாட்டின் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

43 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!

July 25, 2021
சந்தானம் படத்திற்கு எதிர்ப்பு!  இதெல்லாம் காரணமா..ஈ.வே.ரா குரூப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சந்தானம் படத்திற்கு எதிர்ப்பு! இதெல்லாம் காரணமா..ஈ.வே.ரா குரூப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

November 16, 2021

திமுகவைபோல் மக்களை குழப்பாமல் களத்தில் இறங்கிய பாஜக இளைஞரணி…!

September 13, 2020
நீட்‌ தேர்வை புறக்கணிக்க முடியாது! . தி.மு.கவின் அரசியலுக்காக மாணவர்களை  ஏமாற்றாதீர்கள் பா.ஜ.க அண்ணாமலை அதிரடி!

நீட்‌ தேர்வை புறக்கணிக்க முடியாது! . தி.மு.கவின் அரசியலுக்காக மாணவர்களை ஏமாற்றாதீர்கள் பா.ஜ.க அண்ணாமலை அதிரடி!

June 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x