திராவிடர் கழக கலிபூங்குன்றன் மீது பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலசெயலாளர் வழக்குப்பதிவு …


‘திராவிடர் கழகம்’ என்ற ஒரு அரசியல் பிழைப்பு அமைப்பில் பொதுச்செயலாளர் கலிபூங்குன்றன் மீது நாம் அளித்துள்ள புகார்.


பொருள்: மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி , மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடுதல், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் பேசி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி.

அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல், உண்மைக்குப் புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல் அவதூறாக கொச்சையாக சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக கலி பூங்குன்றன் என்கின்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்- சார்பு

‘திராவிடர் கழகம்’ என்ற ஒரு அமைப்பின் பொதுச்செயலாளர் கலிபூங்குன்றன் என்பவர், 03-05-2020 அன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் (https://m.facebook.com/story.php?story_fbid=1621247784704653&id=100004583411148)


“கும்பி அழுகிறது” திருக்கல்யாணம் கேட்கிறதா?” என்று ஒரு பதிவு பதிவிட்டு இருக்கிறார்.
மதுரை அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை அவமதிப்பதறக்காகவும், இந்து கோவில் தெய்வங்களை கல் முதலாளிகள் என்றும், ஆறுகால பூசை முறைகளை பார்ப்பனர்கள் சதிச் செயல் என்றும், சாமிக்கு படைக்கக் கூடிய படையல்கள் எல்லாம் யார் வயிற்றை அறுத்து வைத்துக் கட்டப்படுகிறது.?

மக்களுக்குப் பயன்படாத கோவில் சொத்துக்கள் எதற்கு? கோயிலும் கோவில் திருவிழாக்களும் அன்றாடம் நடக்கும் பூசைகளும் உற்பத்தி நாசம் என்றும், கோயில் சொத்துக்களை எடுத்தால் எந்த “கல் முதலாளிகள்” கேள்வி கேட்கப் போகிறார்கள், என்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதைப் புண்படுத்தி அதன் மூலம் கலவரத்தைத் தூண்டி சமூக அமைதியைக் குலைக்க வேண்டும் என்கின்ற கெட்ட நோக்கத்தோடு பதிவிட்டுள்ளார்.

திருப்பதி கோயில் சொத்துக்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை மதித்து கூட்டம் கூடாமல் கண்ணியமான முறையில் திருவிழாக்களும், பூஜைகளும் நடந்து வருகின்றன. உலக மக்கள் ஆச்சரியப்பட்டு பாராட்டும் வகையில் முன்மாதிரியாக இந்து தர்மத்தைப் பின்பற்றுகின்ற மக்கள், சட்டத்திற்கு கட்டுப்பட்டும், ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டும், சிறப்பானதொரு ஒத்துழைப்பை அரசிற்கு நல்கி வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக இந்த கொரோனா பேராபத்து காலத்தில் ஏழை மக்களைக் காக்க ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேருக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப் படுகின்றது.


இதனாலேயே, இந்துக்கள் மனதை புண்படுத்தி, கோபம் ஊட்டி, பொது அமைதியைக் குலைத்து, ஊரடங்கைக் கெடுக்க வேண்டும் என்கின்ற குற்ற நோக்கத்தோடு மேற்கண்ட பதிவு இடப்பட்டு உள்ளது .


மேற்கண்ட பதிவு மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையைத் தூண்டும் வகையிலும், அதன் மூலம் பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும்.

ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தளத்தை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளைத் தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும் , மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான வார்த்தைகளை வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் பேசி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


எனவே மேற்குறிப்பிட்ட நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


கடிதம் :-
அ.அஸ்வத்தாமன்
பாரதிய ஜனதா கட்சி,
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version