கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்

அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக தலைமை அவசர ஆலோசனை நடத்தியது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்தார்.


இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தேமுதிக தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இரு கட்சிகளும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version