மும்மொழி கல்வியும் தி.மு.கவின் நாடகமும் !

1989ல் சென்னையில் விபி சிங் என்பவருக்கு திமுக சார்பில் கொடுக்கபட்ட பிரமாண்ட வரவேற்பில் கனிமொழிதான் கருணாநிதியின் தமிழை இந்தியில் மொழிபெயர்த்து கொடுத்தார் எனும் செய்தி முன்பே உண்டு, ஆனால் திமுக அதை மறுக்கவில்லை வழக்கம் போல் குழப்பி அடித்தது

இப்பொழுது அது மறுபடியும் பற்றி எரிகின்றது இந்த இடத்தில் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம் அது கல்வி தந்தை ஜேப்பியார் எனும் ஜோசப் பங்குராஜ் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசியது, அது இப்படித்தான் இருந்தது டேய் உனக்குத்தெரியுமா.தமிழ் தமிழ்னு உன் தானைத்தலைவன் சேனக்கிழங்கு வீரன் ஊரை ஏமாத்துறான்.

சர்ச் பார்க் கான்வெண்ட்னு மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல். அதில நீங்கள்ளாம் உங்கப் பிள்ளைகளைச் சேர்க்கவே முடியாது. மாசம் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? சொன்னா மிரண்டுடுவ. ரொம்பப் பெரிய பணக்காரங்க வீட்டுப் பிள்ளங்க மட்டும் தான் அங்க படிக்க முடியும்.

என் மகள் அங்க தான் படிக்கிறா.அந்த ஸ்கூல்ல தமிழ் பாடமே கிடையாது. லாங்க்வேஜ் சப்ஜெக்ட் கூட இந்தி,பிரஞ்சு இப்படித்தான். ஆமாடா.. தமிழ்னு பாடமே கிடையாது. என் மக அங்கத்தான் படிக்கிறா. எனக்கு தமிழ்ப் பற்று,பெரியகொள்கை எதுவும் கிடையாதுப்பா.எம்.ஜி.ஆர் ரசிகன் தான் நான். எம்.ஜி.ஆர் தான் என் தெய்வம். அதுக்கு மேல எனக்கு பெரிய கொள்கைன்னு எதுவுமே கிடையாது.

என் பொண்ணு கூட சர்ச் பார்க் கான்வெண்ட்ல இன்னொரு பொண்ணு படிக்குது. அது யார் தெரியுமா? என் பொண்ணோட க்ளாஸ்மேட் யாரு தெரியுமா? உன் தானைத்தலைவன், சேனைக்கிழங்கு வீரன் கருணாநிதியோட மகள் கனிமொழி!, தமிழ் தமிழ் என்று முழங்கிய கருணாநிதியோட மகள் கனிமொழி”

ஆம், இப்படியேதான் சொன்னார் அந்த பங்குராஜ் இதைவிட இன்னொரு காட்சி உண்டு அது கடந்த வருடம் நடந்த சென்னை எம்.சி.சி ஆங்கில பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டது அந்த தமிழே இல்லா ஆங்கில பள்ளியின் முன்னாள் மாணவர் யார் தெரியுமா? இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலினார்.ஆக கருணாநிதியின் குடும்பமே அரசு பள்ளி பக்கம் செல்லவில்லை என்பது தெரிகின்றது, இதுதான் தமிழை காத்த , தமிழ்கல்வி வளர்த்த தலைவரின் இன்னொரு பக்கம்

1989ல் கனிமொழி விபி சிங் சந்திப்பில் இந்தி பேசியது பற்றி திமுக விளக்கவில்லை இப்பொழுதாவது சொல்வார்களா என தெரியவில்லை!அந்த விதண்டாவாத கூட்டம் இப்பொழுது கேட்டால் என்ன சொல்லும் தெரியுமா?”இதுபற்றி பதில் சொல்ல வேண்டியது வி.பி சிங்கும் கருணாநிதியும். அவர்களிடம் கேட்டு பதிலை பெறலாம் இல்லை கனிமொழி அவர்களுடன் பேசிவிட்டு சொல்ல வேண்டிய இடத்தில் பதில் சொல்வார் ..”

இந்த இடத்தில் எமக்கொரு சந்தேகம், 1989ல் விபி சிங் எனும் பிரதமருடன் பேச தன் மகன் ஸ்டாலினை அழைக்காமல் கனிமொழியினை அழைத்து கொண்டு ஏன் கருணாநிதி சென்றார், விபி சிங் என்பவருக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கும் ஸ்டாலினும் ஆங்கில பள்ளியில்தான் படித்தார்பின்பும் ஏன் கனிமொழி? வி.பி.சிங் முன்னால் தான் அவமானபடுவதை சமார்த்தியமாக தவிர்த்திருக்கின்றார் தலைவர், அவர்தான் தலைவர். இன்றைய சூழ்நிலையில் மும்மொழி கொள்கை என்பது அவசியமே!

Stanely rajan

Exit mobile version