தி.மு.க,கூட்டணியில் குழப்பம்:காங்,மா.கம்யூ.,விசிக தனித்து போட்டி.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, மாவட்ட அளவில் இடபங்கீடு
தருவது குறித்த பேச்சில், சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதனால், காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தனித்து
போட்டியிட முடிவு செய்து உள்ளன.தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ல், இரண்டு கட்டங்களாக
உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.


இதற்காக, தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில்,
கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதில், ஆளுங்கட்சியான தி.மு.க.,கூட்டணிக்குள், பல மாவட்டங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனால், கம்யூனிஸ்ட், காங்.,கட்சிகள் தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக,திருநெல்வேலி மாவட்டத்தில், ஒன்பது, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டஊராட்சியில், 12 வார்டுகளும் உள்ளன.


தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, தி.மு.க.,மாவட்ட செயலர் ஆவுடையப்பன் நேற்று வெளியிட்டார்.அதில், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்க்கு, மாவட்ட ஊராட்சி,ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. அவர்கள்
கேட்ட இடங்களிலும், தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.காங்கிரசுக்கும் கேட்ட இடங்கள் ஒதுக்கப்படவில்லை. ஒரே ஒரு மாவட்ட
ஊராட்சி வார்டு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதிகளில், காங்கிரசார் தனித்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இடபங்கீட்டில் அதிருப்தி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் பாஸ்கரன் கூறியதாவது: கூட்டணி பேச்சு முறையாக நடக்கவில்லை. நாங்கள் வழக்கமாக போட்டியிடும் அம்பாசமுத்திரம்,ராமையன்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சி ஒன்றிய வார்டுகளை கேட்டோம்.


எங்களிடம் பேச்சு நடத்தாமல் வேட்பாளர் பட்டியலை தி.மு.க.,அறிவித்துள்ளது. எனவே, எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில்,
வேட்பு மனுதாக்கல் செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அதே நேரத்தில், தி.மு.க.,வில் ‘சீட்’ பெறுவதிலும், கட்சியில் உச்சக்கட்ட
கோஷ்டி பூசல் அரங்கேறி உள்ளது.இது குறித்து, மாவட்ட தி.மு.க.,பிரமுகர் கூறியதாவது:ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி என இருவருக்கும்,
சீட் தரப்பட்டு உள்ளது. பாரம்பரியமாக கட்சியில் இருந்தவர்களை விட்டு விட்டு,அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களை,மாவட்ட ஊராட்சி தலைவராக்கும்
முயற்சியும் நடக்கிறது. தகுதியான தி.மு.க., வேட்பாளர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன், தி.மு.க., பிரமுகர்கள்
பலரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர்.இதனால், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்கள் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தகவல் அம்மா எக்ஸ்பிரஸ்.

Exit mobile version