இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, பலமாக உள்ள பா.ஜ.கவை எதிர்க்க பல கட்சிகள் ஒன்றிணைந்து இண்டி கூட்டணியை உருவாக்கியது. ஆனால் அந்த கூட்டணி தற்போது உள்ளதா என்பது அவர்களுக்கே தெரியவில்லை.இண்டி கூட்டணியில் பல கட்சிகள் வெளியேறி விட்டன.பல மாநிலங்களில் இண்டி கூட்டணி இல்லை என ஒரே குழப்ப கூட்டணியாக மாறியுள்ளது இண்டி கூட்டணி.
தமிழகத்தை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மும்முனை போட்டி உருவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க நாம் தமிழரின் சீமான் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். ஆனால் தற்போது தான் என்.ஐ. ஏ சோதனையால் அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாகிவிட்ட நிலையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தி.மு.க தொடங்கியிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வரிசைகட்டி நிற்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளை விரட்டவும் முடியாமல் அவர்கள் கேட்ட தொகுதிகளை கொடுக்கவும் முடியாமல் சிக்கியுள்ளது திமுக.
முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் கிளம்பியபோதே, அறிவாலயத்தில் கூட்டணித் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. முதலில், காங்கிரஸ் கட்சியைத்தான் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். தி.மு.க தரப்பில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோர் அமர்ந்திருக்க, காங்கிரஸ் தரப்பிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
மேலும் திமுக குழு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை எடுத்ததுமே கடந்தமுறை போட்டியிட்ட எண்ணிக்கை, இடங்களை இந்த முறை எதிர் பார்க்காதீங்க…’’ என கறாராக காங்கிரஸிடம் கூறிவிட்டார்கள் திமுக.கங்கிரஸாரும் டென்ஷனாகிவிட்டனர். 15 சீட்டுகள் எதிர்பார்க்கிறோம். அதில், 12 சீட்டுகள் கண்டிப்பாக வேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்குவ தாகச் சொன்னீர்கள். அதை மறந்து விடாதீர்கள்’ என சல்மான் குர்ஷித் சொன்னார்.
அமைதியாக காங்கிரஸ் தலைவர்களிடம், ‘‘இந்தமுறை ஐந்து தொகுதிகள்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் ஒதுக்க முடியும். புதுச்சேரியை நீங்களே எடுத்துக்கோங்க. மொத்தம் ஆறு சீட்டுக்கு மேலே எதிர்பார்க்காதீங்க…’’ என்று தி.மு.க தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. வந்திருந்த காங்கிரஸாருக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் தங்களுடைய விருப்பத் தொகுதிகள், எண்ணிக்கையை, தெரியப்படுத்தியிருக்கின்றன. . மேலும் கூட்டணிக்கட்சிகள் இந்தமுறை சொந்தச் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகின்றன. நான்கு சீட்டுகளை எதிர்பார்க்கும் வி.சி.க.‘எத்தனை இடங்கள் கொடுத்தாலும் சரி, அதில் பானைச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்’ என்றுவிட்டனர். ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, தன் மகன் துரை வையாபுரிக்காக திருச்சித் தொகுதியை எதிர்பார்க்கிறார். அவரும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறார். கொ.ம.தே.க கட்சியும் அதே விருப்பத்தைச் சொல்லியிருக்கிறது.
மக்கள் நீதி மையோமோ முதலில், திமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு ஒத்துக்கொள்ளவில்லைதற்போது இரண்டு சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார்கள் அக்கட்சியினர். ‘டார்ச்லைட்’ சின்னத்திற்கு பதிலாக உதயசூரியனில் போட்டியிடும்படி திமுக கூறியுள்ளது . இத்தகு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மறுத்துவிட்டார். ஏற்கெனவே, இராமநாதபுரத்தில் ஏணிச் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மீண்டும் சொந்தச் சின்னத்திலேயே களமிறங்குவதாகச் சொல்லியிருக்கின்றனர்’’.
இந்தமுறை 25 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க தலைமை. சொந்தச் சின்னத்தில் போட்டியிட விரும்புபவர்களுக்கு சீட் எண்ணிக்கையைக் குறைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
சி.பி.எம்., சி.பி.ஐ, வி.சி.க-வுக்கு தலா இரண்டு இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து ஆறு இடங்கள், ம.நீ.ம., ம.தி.மு.க., கொ.ம.தே.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் எனப் பங்கீட்டை முடித்துக்கொண்டு, 25 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது தி.மு.க தலைமை. அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியிருக்கிறார்.
ஆனால் இந்த டீலிங்கில் கூட்டணிக்கட்சிகளுக்கு உடன்பாடில்லை என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அதிமுக வேறு தனியாக இருப்பதால் அந்த பக்கமும் துண்டை போட்டு வைத்துளளர்கள் திமுக கூட்டணி கட்சிகள். தேமுதிக பாமக இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் இறுதி நேரத்தில் அதிமுக பக்கம் சாய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் ஆகியோரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ மேலும் தி.மு.க கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, முதலில் வெளியேறுவர் அடுத்தடுத்ததாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளியேறும் என தி.மு.க வட்டாரங்கள் கூறுகிறது. திமுகவிற்கு சிறு கட்சிகள் சிறு அமைப்புகள் எல்லாம் திமுகவை கழட்டிவிடுவதற்கு தயாராகிவிட்டார்கள் .
தமிழகத்தில் திமுகவிற்கு என்னதான் ஆதரவாக கருத்து கணிப்புகள் வந்தாலும் திமுக அரசின் மீது கோவத்தில் உள்ள மக்கள் தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை விட்டு கொடுக்க கூடாது என முடிவெடுத்துள்ளார். இதற்கு உதயநிதியும் மற்றும் பென் நிறுவனமும் ஆட்சபேனை தெரிவித்துளார்கள் .
நாம் எதற்கு கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்யவேண்டும் நாமே நிற்கலாம் என கூறியுள்ளார்கள். கூட்டணியை விட்டு தரவும் மனசில்லை ஆனால் மகன் சொல்வதை கேட்காமல் இருக்கவும் முடியவில்லை இந்த நிலையில் தான் இருக்கிறார் ஸ்டாலின்.