பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பொழுது எனது புனித நூல் பாபாசாகே அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் என்று பெருமிதத்துடன் கூறினார். அண்ணல் அம்பேத்கர் வகுத்துச் சென்ற அரசியல் பாதையில், வாழ்வியல் நெறியில், அவரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய சமூக நீதி கோட்பாடுகளை முன்னெடுத்துச் செயல்படுத்தும் அரசாக மதியம் மோடி அரசு செயல்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அம்பேத்கர் அவர்களை அவமதித்ததாக பொய் பிரச்சாரம் செய்து இந்தியா முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவுக்கு எதிரான அந்நிய நாட்டு சக்திகளின் கைக்கூலியாக செயல்படும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தூண்டுதலில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 18 கட்சிகளும் தேர்தல் அரசியலுக்காக, பாராளுமன்றத்தை முடக்கி மத்திய மோடி அரசின் வரலாற்று சிறப்பு வாய்ந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை தடுக்க வேண்டும் என்ற சதி திட்டத்துடன் நாடு முழுவதும் மிகப்பெரிய கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி இந்திய மக்களின் அமோக ஆதரவுடன், பிரிவினைவாத வகுப்புவாத இனவாத மதவாத தேசவிரோத சக்திகளை எதிர்த்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் சூழ்ச்சியை, உத்துறை அமைச்சர் தமிழ் சாவுக்கு எதிராக திட்டமிட்டு நடக்கும் கலவர முயற்சிகளை இந்திய மக்களின் ஆதரவுடன் பாஜக முறியடிக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து தவறாக பேசியதாக அமித்ஷா அவர்களுக்கு எதிராக தீர்த்தமான பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டதற்கு காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வளமான இந்தியா, வலிமையான இந்தியாவை கட்டமைப்பதற்கான உறுதியான செயல்பாட்டில் பாஜக அரசின், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிரதம தளபதியாக, பாஜக கட்சியின் இரும்பு மனிதராக, சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின அரசியல் பாதையில் முழுமையான அர்ப்பணிப்போடு, தேச விரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலுடன் அமித்ஷா எடுத்து வந்ததன் காரணமாக , அவரை வீழ்த்த வேண்டும் என்ற தற்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியா உலக வல்லரசாக மாற வேண்டும் என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் வலு சேர்க்கும் வகையில் முக்கிய வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்களை வெற்றிகரமாக மாநிலங்களவை மக்களவையில் நிறைவேற்றி எதிர்க்கட்சிகளின் சதிகளையும் மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தி குழப்பத்தையும் அவதூறு பிரச்சாரங்களையும் முறியடித்து, மத்திய பாஜக மோடி அரசு சாதனை படைத்ததை ஜீரணித்துக் கொள்ள முடியாமல், அமித்ஷா அவர்கள் மேல் பொய் பழி சுமத்தி, அவதூறு பிரச்சாரம் செய்து அவரை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் சதியின் அங்கமாக பாராளுமன்றத்தில் நேற்று அரசியல் நாடகம் நடந்துள்ளது என்பதே உண்மை.
மேலும் நேற்றும் இன்றும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம் கவர்னர் அலுவலகம் முற்றுகை என்று திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி மக்களை குழப்பி வருகின்றனர்.
அமித்ஷா மீது நேற்று மாநிலங்களவையில் உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் மிகவும் கீழ்த்தரமான அரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடு மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. குறிப்பாக நாடாளுமன்றத்தை முடக்குவது தான் இதன் தலையாய நோக்கம் என்பது india கூட்டணி கட்சிகளின் தொடர் சுயநல மக்கள் விரோத செயல்பாடுகளின் மூலம் தற்போது வெளிப்படையாக தெரிகிறது.
இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதத்தை சீர்குலைக்கும் வகையில், மத்திய பாஜக அரசின் இது அவதூறு சுமத்த திட்டமிட்ட சதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து வரலாற்று ஆதாரங்களுடன் காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தையும், பாஜக அரசு அம்பேத்கரின் வாழ்வியலையும் அரசியலையும் கொண்டாடும் வகையில் அவருடைய வழியில் ஆட்சி நடத்துவதையும் பெருமையுடன் குறிப்பிட்டு பேசும்போது, அதில் குறிப்பிட்ட ஒரு கருத்தை தவறாக வேண்டுமென்றே சித்தரித்து காங்கிரஸ் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் அரசியல் நாடகம் நடத்துவதை மக்கள் ஆதரவுடன் பாஜக முறியடிக்கும்.
இந்திய நாட்டில் இருந்து காஷ்மீரை தனி நாடு போல் செயல்பட வைத்த காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது அரசியல் சாசன சட்ட பிரிவு நீக்கப்பட வேண்டும். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்ற அம்பேத்கரின் எண்ணத்தை பிரதமர் மோடி ஆட்சியில் அமித்ஷா முன்னின்று நிறைவேற்றியது எதிர்களுக்கு எதிர்கட்சிகளுக்கு, தேசவிரோத சக்திகளுக்கு சிம்ம சொப்பனத்தை ஏற்படுத்தி நடுக்கத்தை தந்ததற்கு பழிவாங்கவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக தற்பொழுது இந்த திட்டமிட்ட அவதூறு பிரச்சார சதி நாடகம் அரங்கேற்றப்படுகிறது
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2019 -ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்ட 70வது ஆண்டு விழா நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டபோது பாபாசாகேப் அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் புனித நூல் என போற்றி புகழ்ந்து வணங்கி மகிழுந்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டதை மறந்து எதிர்க்கட்சிகள் பாஜக அரசை விமர்சிப்பதை வரலாறு மன்னிக்காது.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன என்று உண்மையை இந்திய மக்களுக்கு உணர்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள வழிகள் குறித்து ஆராயப்படும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இன்று அமித்ஷா அவர்கள் கூறியிருப்பது அவருடைய நேர்மையையும், வெளிப்படையான , உண்மையான அணுகுமுறையும் வெளிப்படுத்தி உள்ளது.
இதையெல்லாம் மறைத்து தமிழகத்தில்,
திமுக அரசின் தூண்டுதலின் பேரில் காங்கிரஸின் கவர்னர் அலுவலகம் முற்றுகை கைது, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்முறையை கட்டவிழ்த்து ரயில் மறியல் போராட்டம், கைது நாடகம் நடத்தி அரசியல் ஆதாயம் தேட திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது வெட்கக்கேடானது.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்