தி.மு.க எம்பி ஆ.ராசாவிற்கு சொந்தமான 15 சொத்துக்களை கையகபடுத்தியுள்ளது அமலாக்கதுறை.
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலர் ஆ.ராசா எம்.பி.யின் அசையா சொத்துக்கள் 15-ஐ முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமானவர் ஆ.ராசா. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழும் இவரது 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மட்டும் சொத்துகுவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கோவையில் உள்ள ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் புரோமோட்டர்ஸ்க்கு சொந்தமான ₹55.0 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் இடம் முடக்கி வைக்கபட்டிருந்த நிலையில் தற்போது அதை முழுமையாக அமலாக்கதுறையின் கட்டுபாட்டிற்கு வந்துள்ளது,.
தற்போது தான் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல்வேறு ஆவணங்களும் பணங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துவருகின்றன
ஒட்டு மொத்தமாக 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மொத்தமாக இதுவரை 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை சோதனையின்போது வரி ஏய்ப்பு விவகாரங்கள் மட்டுமே சிக்கினால் பெரிய பிரச்னைகள் வராது. மாறாக ஊழலுக்கான முகாந்திரமோ, பண மோசடி செய்ததற்கான ஆவணங்களோ சிக்கினால் அது ஜெகத்ரட்சகனுக்கு பெரும் சிக்கலை தரும்.
மேலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகும் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளின் சட்ட விரோத பணபரிமாற்றம் குறித்து பல தகவல்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளதால் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது. முக்கியமாக தி.மு.கவில் உள்ள எம்.பிகளில் இதுவரை 4 கரெண்ட் எம்.பிகள் சிக்கியுள்ளார்கள். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தொடர்ந்து சிக்கி வரும் திமுக எம்.களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டால் மேலும் பல சிக்கலுக்கு திமுக தள்ளப்படும்.