தி.மு.க ரவுடிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை! திருப்பூர் சிறு குறு வியாபாரிகள் கண்ணீர்!

கொரோன பரவல் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு ஊரடங்கு போடப்பட்டது தற்போது தான் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. தமிழகத்திணை பொறுத்தவரையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுமார் 75% மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார்கள். சந்தைகள் சூப்பர் மார்க்கெட் என மக்கள் அதிகம் புலங்கும் இடங்களும் தற்போது இயங்கத்தொடங்கிவிட்டது. சிறு குறு வியாபாரிகள் தற்போது தான் புது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில், சனிக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும். , சந்தை முன், சாலையோரம், சிறு வியாபாரிகள், நூற்றுக்கும் மேற்பட்டோர், காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு பல்வேறு சங்கங்கள் இயங்கி வருகிறது. தி.மு.க.வை சார்ந்த எல்.பி.எப் என்ற சங்கமும் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் ஆள்சேர்க்க அங்குள்ள வியாபாரிகளை மிரட்டியுள்ளார்கள் திமுக நிர்வாகிகளும் லோக்கல் ரவுடிகளும்,

இதுகுறித்து அங்குள்ள 10 வியாபாரிகள் சேர்ந்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்கள் அவர்கள் அளித்த புகாரில், தி.மு.க.சார்பு எல்.பி.எப்., தொழிற்சங்க நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர், தங்கள் சங்கத்தில் இணைய வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும், தலா 250 ரூபாய் சந்தா வழங்க வேண்டும் என்று வசூலில் ஈடுபடுகின்றனர்.சந்தா தரவில்லையெனில், கடையை காலி செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

ஆட்சியில் இல்லாதபோதே ரவுடிசம் செய்யும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ என பெருமாநல்லூர் விவசாயிகள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் ஆதங்கத்தில் உள்ளார்கள் https://www.youtube.com/watch?v=Lo1e27nR-yQ

Exit mobile version