சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்க மாணவர்கள் நடத்திய போராட்டம் ஞாபகம் இருக்கா?2020-21 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கையகப்படுத்தப்பட்டு அரசு கல்லூரியாக மாற்றப்படும் என்று அன்றைய அதிமுக அரசு அறிவித்தது.
அது சற்றே தாமதம் ஆனதால் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தை இயக்கிய திமுக சொன்னதையெல்லாம் படிச்சுட்டு வாங்க.
இதன் தொடர்ச்சியாக அரங்கேறிய சம்பவங்களை இனி காண்போம். 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்த கல்லூரியைக் கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது அன்றைய அதிமுக அரசு.
அப்பொழுது அந்த கல்லூரியில் 2293 மாணவர்கள் படித்து வந்தார்கள்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை மேற்கோள் காட்டி சில விவரங்களை வெளியிட்டார்கள்.
- மாணவர்களால் ஏற்கனவே செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்படாது.
- அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படும் அரசு கட்டணக் கட்டமைப்பின் பலன் தற்போது படிக்கும் மற்றும் வரவிருக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதாவது கொடுத்ததைத் திருப்பி கொடுக்க மாட்டோம், இனி வரும் ஆண்டு கட்டணங்கள் அரசு கட்டண அடிப்படையில் இருக்கும்.
அவ்வளோ தான். போராட்டம் success. வாங்க அடுத்த வேலையைப் பார்க்க போகலாமென்று அந்த மாணவர்கள் கிளம்பிட்டாங்க.
பிறகு ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது. சென்ற மாதம் புதுசா ஒரு அரசாணை வந்தது.
2018ஆம் ஆண்டு ராஜா முத்தையா கல்லூரி ஒரு தனியார் கல்லூரியாக இயங்கிய போது வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டி சென்ற மாதம் 26ஆம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டது திமுக அரசு.
திமுக முன்னெடுத்த போராட்டத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாமல் வந்துள்ளது இந்த அரசாணை.
1) ஜனவரி மாதத்தில் பிறப்பித்த அரசாணையில், இனி வரும் காலங்களில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணமான 13,610 ரூபாய் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று சொன்னதை ரத்து செய்துள்ளார்கள்.
2) 2021-22 ஆண்டு முதல் புதிதாய் சேரும் மாணவர்களுக்கே 13,610 ரூபாய் பொருந்துமாம்.
3) 2017 முதல் 2021 வரை இந்த கல்லூரியில் சேர்ந்து பயிலும் 2293 மாணவர்களின் கட்டணம் தனியார் கல்லூரிகளுக்குச் சமமாக நிர்ணயித்துள்ளது இந்த அரசாணை.
அதாவது இந்த 2293 மாணவர்களுக்குக் கட்டணமாக 13,610 ரூபாய் என்றில்லாமல் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இதற்காகவா அந்த மாணவர்கள் போராடினார்கள்?? இதற்காகவா திமுக போராடியது??
இப்பொழுது பயிலும் மாணவர்கள் அரசு கல்லூரியில் பயின்று வரும் தனியார் கல்லூரி மாணவர்கள். பழைய அரசாணையைத் திரும்பப் பெற்றது ஏன்? சுமார் 300 கோடி ரூபாய் அந்த தனியார் கல்லூரிக்குச் சம்பாதித்துக் கொடுப்பதில் அரசுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?? முதல்வருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த விஷயம் தெரியுமா? உயர் கல்வித்துறை அமைச்சர் பதில் அளிப்பாரா?? – Krishna Kumar Murugan