மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க! தற்கொலைக்கு தூண்டினால் குற்றவியல் சட்டம் பாயும்! அதிரடியில் அண்ணாமலை !

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மாவட்டம் தோறும் பாஜக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மேலும் மாவட்டம் தோறும் செயல் வீர்கள் கூட்டம் நடத்தி கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்,இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் திமுக மற்றும் காங்கிரசை கடுமையான முறையில் விமர்சித்தார். அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது :

காங்கிரஸ் இலங்கை கள்ள உறவு:

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையுடன் இருந்த கள்ள உறவால் இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கபட்டனர். மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. தற்போதைய ஆட்சியில் ஒரே ஒரு நிகழ்வுதான் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் பாஜக ஆட்சி செய்யும் 7 ஆண்டுகளாக பாதுகாப்பாக உள்ளனர்.

நீட் தேர்வு ;

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் 15 மாணவ செல்வங்கள் இதுவரை உயிரிழந்துள்ள சம்பவம் மிகப்பெரிய வருத்தத்தை தருகிறது. தயவு செய்து மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை மேற்கொள்ளாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கிறேன்அரசியல்வாதிகளே நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இது போன்ற அரசியலை ஒரு போதும் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து நீங்க படிக்காதீங்க படிக்காதீங்கனு சொல்லி மாணவர்களை ஏமாற்றினார்கள். அப்போதே நாங்கள் கூறினோம் மாணவர்களை திசை திருப்பாதீர்கள் என. ஆனால் சுகாதாரதுறை அமைச்சர் சுப்ரமணியன் நான் பேசியதை வைத்து காமெடி செய்தார்.

கல்வித்துறை அமைச்சர் டெல்லியில் மனு கொடுத்துவிட்டோம் நீட் தேர்வு வராது எனக்கூறி மாணவர்களை படிக்காமல் இருக்க காரணமாகிவிட்டார். அப்போதும் கூறினோம் உச்சநீதிமன்றத்தில் உறுதியாக்கபட்ட சட்டத்தை யாராலும் தடை செய்ய முடியாது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல் கூட முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

நீட் தேர்வு வந்த பின்னர்தான் ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக முடிந்துள்ளது. அனைவருக்கும் சமமான நீட் தேர்வை ஏதோ பூதம் போன்று உருவகபடுத்தி அரசில் நோக்கத்திற்காக தவறாக சித்தரித்து தி.மு.க அரசியல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு சிறந்த மாணவர்களை தமிழகம் நீட்தேர்வில் பெற்ற நிலையில் தற்போதைய அரசு மாணவர்களுக்கு போதிய பயிற்ச்சியை வழங்காமலும் படிக்க வேண்டாம் என கூறியும் திடீரென நீட் தேர்வை எழுதுங்கள் எனவும் மாற்றி மாற்றி பேசியதால் மன அழுத்தாத்திலே இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் இழப்புக்கு திராவிட முன்னேற்ற கழகமே பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் நீட் எழுதும் மாணவர்களுக்கு தகுந்த வசதிகளை இந்த திமுக அரசு ஏற்படுத்தி தராமல் அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாணவன் தனுஷிற்கும் மாணவி கனிமொழி மாரணத்திற்கு யார் காரணம். த. ச பிரிவு 306 தற்கொலைக்கு தூண்டினால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டம் குற்றவியல் சட்டத்தில் இடம் உண்டு. அப்படி என்றால் இந்த மரங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்.

ஆளுநரை கண்டு ஏன் பயம்

தமிழக ஆளுநரை மக்களும், முதல்வருமே வரவேற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி ஆளுநரை கண்டு அஞ்சுவது ஏன் அவர் எதையோ மறைப்பது போல் தெரிகிறது. ஆளுநரை எதிர்ப்பவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் ஆளுநரை கண்டு பயப்படுகிறார்கள் என கூறினார்.

Exit mobile version