தமிழகத்தில் தொடரும் சோகம்! காவலரை தாக்கிய தி.மு.க வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் அஷ்ரப்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் காவலர்களை திமுகவினர் மிரட்டுவது தொடர்கதையாகி உள்ளது. காவல் நிலையத்தில் காவலரிடம் துப்பாக்கி கேட்டு மிரட்டல் காவல்துறை அதிககாரிகளுக்கு சவால் விடுவைத்து என வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம், தேவாலா காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் காவலர் காவல்நிலையத்திற்கு தனது இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, ஏலமன்னா பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று, காவலர் யோகேஸ்வரனுக்கு வழி விடாமல் சென்றுள்ளது. காவலர் யோகேஸ்வரன் பலமுறை செல்ல முயன்றும், வழிவிடாமல் சென்ற கார், மேங்கோரேஞ்ச் எஸ்டேட் என்ற பகுதியில் நின்றது.

அப்போது, யோகேஸ்வரன், கார் டிரைவரிடம், ‘பணிக்கு அவசரமாக செல்லும்போது வழி விட வேண்டியது தானே’ என கேட்டுள்ளார். காரிலிருந்து இறங்கிய தி.மு.க., வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் அஷ்ரப், அவரது சகோதரர் நிஜாமுதீன், டிரைவர் முகமது கபீர் மற்றும் செல்வகுமார் ஆகியோர், காவலர் யோகேஸ்வரனை ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, கடுமையாக தாக்கியுள்ளனர். ‘நாங்கள் யார் எண்டு தெரியுமா நாங்கள் திமுகவினர் ஆளுங்கட்சியினர்; ஏதாவது பேசினால் என்ன வேண்டுமானாலும் செய்வோம்’ என, கொலை மிரட்டல் விடுத்து காவலரின் இருசக்கரவாகனத்தை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளனர். யோகேஸ்வரன் புகாரின்படி, தேவாலா போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Exit mobile version