திமுக ஆட்சி வந்ததே வேஸ்ட்.. கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையம் யார் அப்பன் வீட்டு காசு.. கொந்தளிக்கும் பொதுமக்கள்..

kilambakkam

kilambakkam

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் படும் வேதனை கிளம்பாக்கம் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் கொந்தளிக்கும் மக்களின் குரல்கள் இதுதான்:

கொள்ளை அடிக்கவே ஆட்சிக்கு வந்திருக்காங்க..இந்த ஆட்சி மாறினால் தான் மக்கள் நல்லா இருப்பாங்க.
சிலை திறக்கதான் இந்த ஆட்சியாளர்கள் லாயக்கு தி.மு.க இனிமேல் ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வரக்கூடாது கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கரை கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினார்கள்.யார் அப்பன் வீட்டு காசு…

கிளாம்பாக்கத்தில் இரவு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, நெடுஞ்சாலைக்கு வந்து பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை, கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இதை கடந்தடிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திறந்து வைத்திருந்ததிலிருந்து சென்னை நகரில் இருந்து கிளாம்பாக்கத்தை அடையப் பல மணிநேரம் ஆவதாக மக்கள் புகார்களை அடுக்கத் தொடங்கினர்.

அதோடு தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்னை நகருக்குள் செல்லாமல், கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் திடீர் உத்தரவால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் ஸ்தம்பித்துப் போயின.

இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக இடைக்கால தீர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்து, முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் தயாராகிவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது என்று தெரிவித்துள்ள நீதிபதி, இதற்குத் தீர்வு காணும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டை பயன்படுத்த ஆணையிட்டுள்ளார்.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயணிகளுக்கான வசதிகள் செய்துதரப்படாத நிலையில், அவசர கதியில் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றசாட்டை வைத்தனர்.

மேலும் கடந்த வெள்ளி கிழமை மாலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளம்பாக்கத்தை நோக்கி படையெடுத்தார்கள் . பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே அங்கு பேருந்துகள் இயக்கப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.,முன்பதிவு செய்யா தோரை ஏற்க மறுத்ததாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

நேரம் செல்லச் செல்ல பயணிகளின் கூட்டம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், நள்ளிரவை நெருங்கும்போது நிலையமே பேருந்துகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேருந்துகளை சிறைபிடித்தும், சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில் அமர்ந்து விடியவிடிய சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதற்கு தான் அவசரமாக திறக்கப்பட்டதா கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையம் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் உள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு. ஒருபக்கம் பொது மக்கள் போராட்டம் மற்றொரு பக்கம் ஊழல் புகார் என மாட்டி கொண்டுள்ளது கிளாம்பாக்கம் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்

அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சுமார் 2 மணிநேரம் நீடித்த போராட்டம் முடிவுக்குவந்தது. இதற்கிடையே போலீஸாருக்கும் பயணிகளுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருபுறம் பயணிகளின் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மறுபுறம் குழந்தைகள், பெண்கள் என பலர்நடைமேடைகளிலும், பேருந்து நிறுத் தங்களிலும் படுத்து உறங்கினர்.

இதுதொடர்பாக பயணிகள் கூறும்போது, ‘‘திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம் என எந்த ஊருக்கும் பேருந்து சேவை இல்லை. நேரடியாக பேருந்து இல்லாவிட்டாலும் இணைப்பு பேருந்துகள்கூட இல்லை, முன்பதிவு முடிந்துவிட்டது என கூறுகின்றனர். உணவகத்திலும் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இங்கு கழிவறை தவிர்த்து எந்த வசதியும் இல்லை” என்றனர்.

திருச்சி சென்ற பயணி ஒருவர்கூறும்போது, ‘‘பிரம்மாண்டமான பேருந்து நிலையத்தில் ஒரு சில திருச்சி செல்லும் பேருந்துகளே இருந்தன. முகூர்த்த நாள், வாரவிடுமுறை நாட்களில் அதிக கூட்டம் வரும் என தெரிந்தும் ஏன் அரசுமெத்தனமாக இருக்கிறது எனதெரியவில்லை. போதாக்குறைக்கு நடத்துநர், ஓட்டுநர்களின் தரக்குறைவான பேச்சுகள் வேறு. இரவு 9.30 மணிக்கு கிளாம்பாக்கம் வந்தடைந்த நான் ஒருவழியாக காலை 4.30 மணிக்குதான் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினேன்’’ என்றார்.

Exit mobile version