உடைகிறதா காங்கிரஸ்-திமுக கூட்டணி ! கார்த்திக் சிதம்பரத்தால் கூட்டணிக்கு உதயநிதி வைத்த செக் !

உடைகிறதா காங்கிரஸ்-திமுக கூட்டணி! கார்த்திக் சிதம்பரத்தால் கூட்டணிக்கு உதயநிதி வைத்த செக்!

டில்லியில் நேற்று நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்திற்கு தகுதி நீக்கப்பட்ட எம்.பி ராகுல் காந்தி வந்தார். அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் நின்றிருந்த எம்.பி கார்த்திக் சிதம்பரம் ,ராகுலுக்கு கை கொடுத்து வரவேற்க முயன்றார். ஆனால், ராகுல் அவர் முகத்தை கூட பார்க்காமல் சென்று விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாய் பரவியது.

இதனை தொடர்ந்து ஏன் கார்த்திக் சிதம்பரம் மேல் ராகுலுக்கு இவ்வளவு கோவம் என டெல்லி வட்டாரங்களை விசாரிக்கையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலை சந்திக்க, முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்லாமல் தவிர்த்ததற்கு, உதயநிதி — கார்த்தி சிதம்பரம் இடையிலான மோதலே காரணம் என சொல்லப்படுகிறது

குஜராத்தில் வசிக்கும் மோடி சமூகம் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அதன் காரணமாக அவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல் பதவி இழப்பு விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டது. அவரும் டில்லி செல்ல தயாராக இருந்தார்.

உதயநிதி -கார்த்திசிதம்பரம் முட்டல்

இந்த நிலையில் புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், அமைச்சர் உதயநிதியை குறை கூறினார். ‘நீட் தேர்வு விலக்கு தொடர்பாக, அமைச்சர் உதயநிதி சொன்னதை பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்’ என, கோபமாக கூறினார். இது உதயநிதி தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சின்னவரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில், கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து பதிவுகளை பதிவு செய்தார்கள்

1.நீட் தேர்வு ரத்து பற்றி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றதால் தான், கார்த்தி சிதம்பரமும் வெற்றி பெற்றார்.
2.சிவகங்கையில் மீண்டும் கார்த்திக்கு ‘சீட்’ வழங்க வேண்டும். ஆனால், பா.ஜ.,வை சேர்ந்த எச்.ராஜாவை ஜெயிக்க வைக்க வேண்டும். ஏன்னா, அவரை விட இவர் நல்லவர்.
3.கண்டிப்பாக, கார்த்திக்கு சீட் கொடுக்கக் கூடாது. ஒரு பலமான தி.மு.க., வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
4.லோக்சபா தேர்தலில் கார்த்திக்கிற்கு சீட் இல்லை என்பதை உறுதி செய்த பின் தான், காங்கிரசுடனான கூட்டணி பேச்சுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

கூட்டணிக்கு வேட்டு :
இந்த விவகாரத்தால் தான், ராகுலை சந்திக்கும் திட்டத்தை, ஸ்டாலின் தவிர்த்துள்ளதாக, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக்கூடாது சீட் தந்தால் கூட்டணிகிடையாது என காங்கிரஸ் மேலிடத்தில் திமுக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.இதன் காரணமாகத்தான் ராகுல் கார்த்திக் சிதம்பரத்தை கண்டுக்கவில்லையாம்.

Exit mobile version