தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கிறது ஜேபி.நட்டா அவேஷம்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது.இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர் இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து.

தமிழகத்தின் விருதுநகர் மக்கள் பாஜக மீது கொண்டுள்ள அன்பை இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், ‘சப்கா சாத் சப்கா விகாஸ் சப்கா விஸ்வாஸ் சப்கா பிரயாஸ்’ – ‘அனைவரோடும் இணைந்து, அனைவருக்குமான, அனைவரின் நம்பிக்கையை பெற்று, அனைவருக்குமான வளர்ச்சி” என்ற உணர்வோடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய பாஜக அரசு பல திட்டங்களை செய்து வருகிறது. இருப்பினும், திமுகவின் ஊழல் மற்றும் மோசமான ஆட்சி தமிழகத்தை எதிர்மறையாக பாதிக்கிறது; இந்த ஊழல் மற்றும் குடும்ப அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு நிற்க முடிவு செய்துள்ளனர். 400 இடங்களைக் கடக்க வேண்டும் என்ற மோடி அவர்களின் இலக்கை நிறைவேற்றுவதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்த ஆதரவு ஒரு சிறப்பான செய்தியாகும்.

கரூர் பொதுக்கூட்டம் குறித்து நட்டா கூறிய கருத்து:-

கரூர் மக்கள் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டதன் மூலம் பா.ஜ.க.வுக்கு கரூர் மக்கள் ஆதரவு இருப்பது தெரிந்தது. பிரதமர் திரு.@நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், காசி-தமிழ்ச் சங்கத்தை நிறுவியதன் மூலம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அம்சங்களில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகிறோம். வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான நாகரீக தொடர்புகளை மேம்படுத்துகிறோம். கரூர் மக்கள் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டதன் மூலம் பா.ஜ.க.வுக்கு கரூர் மக்கள் ஆதரவு இருப்பது தெரிந்தது. “மீண்டும் ஒரு முறை மோடி அரசு” என்ற மந்திரத்தை முன்வைத்து வரும் தேர்தலில் மீண்டும் தாமரை மலர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உறுதியாக பதிந்திருப்பது தெரிகிறது.

தமிழகத்தின் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது. சனாதன தர்மம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்க திமுகவும் காங்கிரஸும் செய்த முயற்சிகள், இவற்றின் நம்பிக்கைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலுடன், தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கடுமையாக சீர்குலைத்துள்ளது. இது தமிழக மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து புத்துயிர் கொடுத்திருப்பது நமது பாஜக அரசு ஆகும். பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், தமிழகத்தின் வளர்ச்சியால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதியுடன் ஆதரிக்க தமிழகம் முடிவு செய்துள்ளது என்பதை பொதுமக்களின் உற்சாகம் உறுதி செய்கிறது. வரும் தேர்தலை “வளச்சியடைந்த பாரதம்” என்ற பிரச்சாரத்தோடு எதிர்கொள்வோம்! என கருத்து பதிவிட்டுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version