தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :

கடந்த ஒரு வாரமாக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டம் மிக காரசாரமாகவும் நகைச்சுவையாகவும் நடக்கிறது என்றே சொல்லலாம். திமுகவினர் எப்போதும் போல் வெளிநடப்பும் செய்து வருகிறார்கள்

நேற்று நடந்த சட்டமன்ற நிகழ்வில்கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து கடுமையாக பேசினார். குறிப்பாக சிறுபான்மை மக்களை கலவரத்தில் ஈடுபட தூண்டுவது எதிர்க்கட்சிகள் தான் என எதிர் காட்சிகள் மீது குற்றம் சாட்டினார்

நேற்று நடந்த சட்டமன்ற விவாதம் :

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்சட்டமன்ற கூட்டம் நடைபெறும் போது, அமைச்சர்கள் எதாவது புதிய அறிவிப்புகளை, சட்டமன்ற சபை கூட்டம் நடைபெறும்போது அறிவிப்பை வெளியே வெளியிட்டால், அது அவை உரிமை மீறல் . இரண்டு நாட்களுக்கு முன், எங்கள் தலைவர், என்.பி.ஆர். எனப்படும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினார். அப்போது வருவாய் துறை அமைச்சரோ மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, தீர்மானம் போட முடியாது என, கூறினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ‘என்.பி.ஆர்., திட்டம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என, கூறியுள்ளார். இதை, தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. வெளியில் சொன்ன கருத்தை, தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் அதை நாங்கள் கேட்கிறோம் ஆதரிக்கிறோம் . இந்த கருத்தை, சட்டசபை காஙகிரஸ் , தலைவர், ராமசாமி, முஸ்லிம் லீக் உறுப்பினர், முகமது அபூபக்கர் ஆகியோரும் வலியுறுத்தினர்.

அமைச்சர் உதயகுமார் பதிலளிக்கையில் : சட்டமன்ற சபையில் கூறியதையே, செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். புதிய திட்டத்தையோ, புதிய அறிவிப்பையோ வெளியிடவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்: மத்திய அரசிடமிருந்து விளக்கம் வந்த பிறகு தான், என்.பி.ஆர்., குறித்து முடிவு செய்வோம் என, அமைச்சர் கூறியுள்ளார். அதை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற, இந்த அரசு முன் வர வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: என்.பி.ஆர்., குறித்து தீர்மானம் குறித்து வலியுறுத்துகிறீர்கள் நடுவண் அரசு இயற்றிய சட்டத்திற்கு விரோதமாக, நாம் ஒரு தீர்மானத்தை எப்படி கொண்டு வர முடியும். அந்த தீர்மானம் செல்லுபடியாகுமா

மீண்டும் ஸ்டாலின்: என்.பி.ஆர்., குறித்து தீர்மானம் நிறைவேற்ற, அரசு முன்வரவில்லை. எனவே, என்.பி.ஆர்., நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி, இந்த சபையில் பதிவு செய்யப்பட வேண்டும். அதை அமைச்சர் செய்வாரா?

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார்: என்.பி.ஆர். பணிகள் துவக்கப்படவில்லை. கணக்கெடுப்புக்கு மட்டுமே, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்.பி.ஆர்., கணக்கெடுப்பை, 2010ல் நடத்தியபோது, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது, எந்த ஆவணமும் கேட்கப்படவில்லை.

ஸ்டாலின்: அப்படியென்றால், என்ன விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளீர்கள்; கடிதத்தை வெளியிடுங்கள்.

இதற்கு கோபமாக எழுந்து பதிலளித்த முதல்வர்: பொதுமக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும், நீங்கள் அச்ச உணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். ‘மத்திய அரசிடம், இந்த ஆட்சி பயந்து கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் சிறைக்கு போய் விடுவர்’ என்கிறீர்கள். எந்த காலத்திலும், அது நடக்கவே நடக்காது. உண்மை நிலையை, மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். ஏற்கனவே, ‘சட்டத்தில் எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறது என்று சொல்லுங்கள்; தீர்த்து வைக்கிறோம்’ என்று சொன்னேன். பாதிப்பு பற்றி சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. அது உங்கள் ஆட்சியிலும் நடந்தது. ஏப்., 1 முதல், கணக்கெடுப்பு எடுக்க உள்ளனர். ஆனால், நீங்கள் போராட்டம் நடத்தும் மக்களிடம், ‘யாரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம். போராட்டம் தொடர வேண்டும். நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம்’ என்று சொல்கிறீர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும், அவர்கள் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்… அவர்கள் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக போராடுகின்றனர்.

நீங்கள் போராட்டத்தை துாண்டி விடுகிறீர்கள். பதற்றத்தை தவிர்க்க, சிறுபான்மை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அமைச்சர் தெளிவான கருத்தை கூறியுள்ளார். அதில், உரிமை மீறல் கிடையாது. ‘மத்திய அரசிடம் என்ன விளக்கம் கேட்டு, கடிதம் எழுதி உள்ளீர்கள்’ எனக் கேட்டீர்கள். இந்த சட்டத்தை, 2003ல் நீங்கள் எடுத்து வந்ததால் தான், இந்த பிரச்னையே வந்துள்ளது. நீங்கள் எடுத்து வந்த சட்டத்தில், மத்திய அரசு, மூன்று புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. அதற்கு விளக்கம் கேட்டுள்ளோம்.

தமிழகம், ஜாதி, மத வேறுபாடில்லாமல், அமைதியாக உள்ளது. இந்த நிலை தொடர, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். நீங்கள் அச்ச உணர்வு ஏற்படும் வகையில், சில கருத்துக்களை சொல்வதால், பதற்றம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க, நாங்கள் விளக்கம் அளிக்கிறோம்.

சபாநாயகர் தனபால்: அமைச்சர் சபையில் கூறியதையே, வெளியில் கூறியுள்ளார். எனவே, அவை உரிமை மீறல் என்ற கருத்து, சரியாக இருக்காது. இதில் மேற்கொண்டு, விவாதம் வேண்டாம். இவ்வாறு, விவாதம் நடந்தது.

நன்றி:தினமலர்

Exit mobile version