மரியாதை என்றால் என்ன என்றே திமுகவினருக்கு தெரியாது-அண்ணாமலை ஆவேசம்…

‘சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் தி.மு.க., அரசு, தன் கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொடுக்க வேண்டி மரியாதையை மட்டும் மறந்து விடுகிறது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஜனவரியில் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., அலுவலகத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப் பட்டார். நேற்று, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி., சின்ராஜ், மரியாதை இன்மையை சுட்டிக்காட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் தி.மு.க., அரசு, தன் கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவர் போலிருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version