ஹிந்து கடவுள் எதிர்ப்பு இயக்கமான தி.க வில் இருந்த பிரிந்த தி.மு.க இவர்கள் ஊருக்கு உபதேசம் வீட்டிற்கு இல்லை தன் கட்சியினருக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இந்து மக்களை தரம் தாழ்த்தி பேசி மற்ற மதங்களில் உள்ளவர்களை மனம் குளிர்விப்பார். அனைத்தும் ஒட்டிற்காக. தற்போதைய தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , போகாத கோவில்கள் இல்லை கும்பிடாத சுவாமி இல்லை செய்யாத பூஜைகள் இல்லை என்பது உலகறிந்த விஷயம்.
ஆனால் கட்சியின் கொள்கை இந்துவிரோத போக்கு. இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம் கிருஸ்துவ முஸ்லீம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுவோம் இது தான் திமுகவின் பகுத்தறிவு.இதுநாள் வரை திமுக இந்துக்களை ஏமாற்றி வாங்கிவந்த ஓட்டுக்களை தற்பொழுது வாங்க முடியாத சூழ்நிலை தமிழகத்தில் புதிய காலம் பிறந்துள்ளது. சமீப காலமாக இந்துக்களிடையே ஒற்றுமை அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்பது உண்மை.
தமிழ் கடவுள் முருகபெருமானை இழிவுப்படுத்திய திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை கண்டு திமுகவே அறிக்கை வெளியிடும் நிலைக்கு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதோடு மட்டுமில்லாமல் இந்து அமைப்புகளால் நடத்தப்பட்ட வேல் பூஜை தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன், தன் மகன்கதிர் ஆனந்துடன், மாகதேவமலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார். துரைமுருகனுக்கு பெரிய மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து, சாமியார் அருள்வாக்கு கூறியுள்ளார்.இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியதால், தி.மு.க., வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. கடவுள் இல்லை என கூறி இஸலாமியர் கிருஸ்துவர்கள் ஓட்டுக்களை வாங்கி வருகிறோம் இப்படி செய்தால் அவர்கள் எப்படி நமக்கு ஒட்டு போடுவார்கள் என முணுமுணுக்க தொடங்கி விட்டதாம் அறிவாலயத்தில்.
கடவுளை கும்பிட்டால் கூட சமாளிக்கலாம் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றதன் நோக்கம் என்னவோ மூடநம்பிக்கைக்கு எதிரான கட்சி என கூட கூறமுடியாத நிலைக்கு திமுக சென்றுவிடும் என அச்சத்தில் உள்ளார்களாம் அண்ணா அறிவாலய உபிஸ்.
இது குறித்து, துரைமுருகன் ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:வேலுார் லோக்சபா தேர்தலில், கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என, விபூதி சாமியார் முன்கூட்டியே கணித்து கூறினார். அவர் கூறியது, அப்படியே நடந்தது.
அதேபோல, துரைமுருகனுக்கும், தமிழக அரசின் உச்ச பதவி கிடைக்கும் என, சாமியார் கூறியதால், அவரது வாக்கு பலிக்கும் என்ற, நம்பிக்கை உருவாகி உள்ளது. இது என்னடா புது உருட்டல் இப்படி செய்தால் வீரமணிகு பொழப்பு எப்படி ஓடும்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















