இருளர் சமூக மக்களை மிரட்டிய தி.மு.க நிர்வாகி!ஓடிபோங்க இல்லை கொட்டாயில் வைத்து கொளுத்தி விடுவேன்! #ஜெய்பீம்

இருளர் சமூக மக்கள் தங்கள் வேலைக்கேற்றவாறு தங்கள் குடியிருப்பு மாற்றிக்கொள்வது வழக்கம்.இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்து சுங்குவார்சத்திரம்ஒட்டியுள்ளபகுதியில் 12-க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.

இருளர் சமூகம் மக்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தல் ,விவசாய கூலி வேலைகள் செய்தல், செங்கல் சூளைக்கு செல்லுதல் போன்ற தொழில்களை கூலி தொழில்செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது விட்டுவிட்டுப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பாப்பாங்குழி என்ற கிராமத்தில் குப்பைகளை சேகரித்து பிரித்தெடுக்கும் பகுதியில், டென்ட் கொட்டாயை அமைத்து நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இருளர் சமுதாயத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மனைவி கவிதா, மற்றும் 3 மாத கை குழந்தையுடன் தங்கியுள்ளார். அதேபோல் முருகன் என்பவர் தன்னுடைய 6 மாத கர்ப்பிணி மனைவியான பவானியுடன் தங்கி கூலி வேலைகளை செய்து வருகிறார். பூபதி தன்னுடைய மனைவி வேதவல்லியுடனும் சந்தோஷ், சீனிவாசன் ,பரத், ஆகியோர்களும் அங்கு தங்கி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் டென்ட் கொட்டாய்க்கு அருகே உள்ள இடத்தில் , இருளர் மக்கள் அனைவரும் இரவு நேரம் தங்கி வந்துள்ளார்கள். இதனை பார்த்தபாப்பாங்குழி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் லோகநாதன் என்பவர், இருளர் மக்களைப் பார்த்து உடனடியாக இந்த ஊரை விட்டு ஓடி சென்றுவிடுங்கள் என கூறியுள்ளார்.

உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேறாவிட்டால், உங்கள் அனைவரையும் டென்ட் கொட்டாயில் வைத்து ஊற்றி கொளுத்தி விடுவேன் என மிரட்டியதால், அச்சமுற்ற இருளர் மக்கள் அனைவரும் பயந்து நடுங்கி இரவு முழுவதும் தூங்காமல் சாப்பிடாமல் அச்சத்துடன் இருந்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து இருளர் இன மக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இருளர் சமுதாய மக்களுக்கு படம் எடுத்த சூர்யா இந்த உண்மை சம்பவம் குறித்து பேசவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். ஜெய் படம் பார்த்த பிறகு முதல்வர் ஸ்டாலின் அனைத்து விதமான உதவியும் இருளர் சமூகத்திட்கு வழங்கபடும்என அறிவித்திருந்தார். ஆனால் இங்கு நடப்பதோஅவருடைய கட்சியை கட்சியைச் சேர்ந்த சேர்ந்த பிரமுகர் இருளர் சமுதாய மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

வெறும் படங்களில் பணத்திற்காக உபயோகப்படுத்தும் சூர்யாவும் சரி அதற்கு ஆதரவு கொடுத்த நபர்களும் தற்போது ஆளை காணவில்லை. மேலும் இருளர் சமுதாய மக்கள் வீட்டிற்கு செண்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலினோ கப்சிப். எனவே அப்பகுதி சமூக ஆர்வலர்களிடையே இந்த சம்பவம் மிகவும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version