தி.மு.க ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆனா நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. மின்துறை, போக்குவரத்து துறை,நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு, என ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக வைத்து, மகாலட்சுமி கட்டுமான நிறுவனம், வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் இந்த நிறுவனங்கலும் திமுக பிரமுகர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் ஆகும். இந்த இரு நிறுவங்கினாலும் கடந்த 6 மாதமாக மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் மேலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கப்பட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள மகாலட்சுமி கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம்; அரும்பாக்கத்தில் உள்ள வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆகியவற்றில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக வருமான சோதனை நடத்தினர்.
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், உறவினர்கள், அதிகாரிகள் வீடுகள் என, 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:வரி ஏய்ப்பு புகாரை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின.
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில், சென்னையில் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் என தெரியவந்துள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் அதிபரான ஜவகர், கடந்த 2017ஆம் ஆண்டு “பயமா இருக்கு” என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார். இவர் அண்ணா நகர் திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேப்போல சென்னை மேற்கு அண்ணா நகர் பகுதியில் மகாலட்சுமி பில்டர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் சென்னை கிழக்கு பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் லோகேஷூக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லோகேஷ் திமுக அமைச்சர் சேகர் பாபுவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகள் என மொத்தம் எட்டு இடங்களில், சோதனை நடைபெற்று வருகிறது.