தி.மு.க பொருளாளராக நான் போட்டியிட்ட போவதில்லை போட்டியிட மனு வாங்கப் போவதும் இல்லை என்று திமுக ஆ.ராசா தெரிவித்துள்ளார். வேறு வழி கிடையாது. ஸ்டாலின் குடும்ப கட்சிக்குள் பதவி தரமாட்ட்டார்கள் என்பது ஆ.ராசாவிற்கு தெரியும் அதனால் மீசையில் மண் ஒட்டாதது போன்று ஆ.ராசா பதவிக்கு போட்டியிடவில்லை என கூறிவிட்டார்.
துரைமுருகன் திமுகவின் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தவர். அதேமாதிரி திமுகவின் பொருளாளர் பதவிக்கு அ. ராசா பொருத்தமானவர் காரணம் அவர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். 2 ஜி வழக்குகளை திறமையாக கையாண்டவர் மேலும் பல குடும்ப சொத்துக்களையும் பாதுகாத்து வருகிறார். ஆனால் இந்த முறை அந்த பதவி கிடைக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது. ஏனென்றால் ஸ்டாலின்க்கும் கனிமொழிக்கும் தற்போது வரை ஆகாது. இருந்தாலும் கனிமொழி கருத்துக்களுக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வருகிறார். இது கே.டி பிரதர்ஸ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் சற்று விலகி இருக்கிறார்களாம் கே.டி பிரதர்ஸ். இந்த இடியாப்ப சிக்கலில் தான் திமுகவின் பொதுக்குழு கூடுகிறது. எத்தனை பேர் பாஜகவில் இணையப்போகிறார்களோ என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு திமுகவின் பொதுக்குழு தான் முடிவு செய்யும்
இன்றைய அரசியல் சூழ்நிலையில்பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆ.ராசா திமுக பொதுச்செயலாளராக ஆவதற்கான கட்டாயத்தை தமிழக பா.ஜ.க ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் பட்டியல் இனத்தைச் சார்ந்த முருகன் அவர்களை பாஜக தலைவராக நியமித்துதான். கலைஞர் இல்லாத சமயத்தில் புதிய அரசியல் சூழ்நிலையில் திமுகவின் பதவி நியமனங்கள் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுவும் திமுக உடன்பிறப்புகள் மத்தியிலும் அந்தக் கட்சியில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் ஆ.ராசாவின் நியமனம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.அப்படியும் கூட ஆ. ராசா பொருளாளர் பதவி ஆக முடியவில்லை எனில் தி.மு.க தொடர்ந்து சமூக நீதி பற்றி பேசினால் எடுபடுமா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏற்கனவே திமுக ஆப்ரேசன் என ஒரு திட்டத்தை கையில் வைத்து கொண்டு தான் களத்தில் உள்ளது பாஜக திமுகவில் இருந்து 16 சட்டமன்ற உறுப்பினர்கள்,15 மாவட்ட செயலாளர்கள்,14 முக்கிய நிர்வாகிகள் என்று விளக்கம் என்கின்றார் பாஜக தேசிய நிர்வாகி ஒருவர். இந்த நிலையில் திமுகவின் பொதுக்குழு முடிவுகள் திமுகவிற்கு சாதகமோ இல்லையோ பாஜகவிற்கு சாதகம் தான்.
என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.