பல நூறு கோடிகளை ஏமாற்றிய தி.மு.க நிர்வாகி! தி.மு.க வின் மோசடியை வெளியிட்ட மாரிதாஸ்!

தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்று 7 மாதம் கடந்த நிலையில் தி.மு.க அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கொலை வழக்கில் திமு கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு.

தமிழகம் முழுவதும் தினம் தோறும் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்சனை மாமூல் பிரச்சனை,நில அபகரிப்பு பிரச்சனை என பல சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது. திமுக அரசின் மீது மக்களுக்கும் ஒரு வித கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தான் ஊரக தொழிற்துறை அமைச்சரின் உறவுக்காரரும் தி.மு.கவின் நிர்வாகியுமான கௌரிஷங்கர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. நடுத்தரமக்களையும் இளைஞர்களையும் குறிவைத்து ஏமாற்றப்பட்டுளளர்கள். பிசினஸ் தொடங்கலாம் எந்தவித முதலீடும் செய்ய தேவையில்லை என ஆசைவார்த்தை காட்டி இளைஞர்களையும் நடுத்தர பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொந்தகாரருமம் திருப்போரூர் வர்த்தக அணி அமைப்பாளாருமான கௌரி ஷங்கர்முதலில் ரியல் எஸ்டேட் செய்த வந்த கௌரி ஷங்கர் அடுத்தது எப்படி மக்களை ஏமாற்றலாம் என சிந்தித்து ஒரு புதிய மோசடி திட்டததை வெளியிட்டுள்ளார். அதாவது தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு வலை விரித்துள்ளார். எங்கள் நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு பிடித்த தொழிலை செய்யுங்கள் என்று முதலீடு செய்ய தேவை இல்லை என ஆசை வார்த்தை காட்டி இளைஞர்களை கவர செய்துள்ளார்.

மேலும் இளைஞர்கள் இந்த திட்டத்தில் இணைந்தவுடன் குறைந்த முன்பணம் செலுத்த வேண்டும் என ரெட்டிஷ் நிறுவனம் கூறுகிறது. தொழிலில் இறங்கி விட்டதால் பணத்தினை முதலீடு செய்கிறார்கள் இளைஞர்கள்.

பணம் பெற்றவுடன் ரெடிஸ் நிறுவனம் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.தொழில் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பத்திலை. முதலீடு செய்தவர்கள் முன் பணம் கட்டியவர்கள் நேரில் சென்றாலோ இல்லை போனில் தொடர்பு ரெட்டிஷ் கம்பெனியின் நிறுவனர் கௌரி ஷங்கர் முதல்வருடன் இருப்பதாக கூறுகிறார். இல்லை அமைச்சர் தா.மோ.அன்பரசு அவர்களுடன் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார். என புலம்பி வருகிறார்கள். காவல் காவல் துறையிடம் புகார் கொடுத்ததும் அமைதி காக்கிறதுஏ னென்றால் திமுக நிர்வாகி என்பதால்.

இந்த திட்டத்தின் மூலம் திமுக நிர்வாகி பலநூறு கோடி ஏமாற்றிருப்பதாக மாரிதாஸ் கூறியுள்ளார். திமுகவினர் எந்த தொழில் செய்தாலும் அவர்களுடன் சற்று கவனமாக இருக்க வேண்டும் என கூறுகிறார்

Exit mobile version