சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியலில் ஒரு உண்மை மட்டும் தெளிவாகிறது.திமுக ஆட்சி இப்போது தாக்குதலுக்கு உள்ளாகவில்லை…திமுக ஆட்சி சிதற ஆரம்பித்துவிட்டது.பல வருடங்களாக “பாஜக பயம்” காட்டி,“டெல்லி தலையீடு” என்று கூச்சலிட்டு, “மாநில உரிமை” என்ற வார்த்தையை கவசமாக வைத்துதிமுக தப்பித்து வந்தது.ஆனால் 2026-க்கு முன் அந்த கவசம் உடையப் போகிறது.ஏனெனில், இந்த முறை திமுக எதிர்கொள்வதுபேச்சு அரசியல் அல்ல…சட்டம், விசாரணை, நிர்வாக உண்மை, மக்கள் அனுபவிக்கும் வேதனை.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, “ஊழலுக்கு அரசியல் கவசம் இருக்கக் கூடாது” என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது மத்தியில் ஆளும் பாஜக,அரசியல் பழிவாங்கல் செய்யவில்லை.சட்டத்தை செயல்படுத்துகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரி –இவை அரசியல் கட்சிகள் அல்ல.இந்தியாவின் சட்ட அமைப்புகள்.ஒரே மாநிலத்தில், ஒரே கட்சியை சேர்ந்த அமைச்சர்கள்,உறவினர்கள், உதவியாளர்கள்,இவ்வளவு பேர் விசாரணை வளையத்துக்குள் வருகிறார்கள் என்றால்,அதற்கு காரணம் அரசியலா?அல்ல…ஊழலா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் சட்டம் தன் வழியில் நடக்கும்; குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் தப்ப முடியாது” என்ற அமித்ஷாவின் கடும் அரசியல் செய்தி, தமிழக அரசியலில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பாஜக உள்ளே வந்துரும்”என்று பயமுறுத்தும் திமுகவிடம்,மக்கள் இப்போது கேட்கும் கேள்வி வேறு.“நீங்க உள்ளே என்ன பண்ணினீங்க?”மது, மண், கனிமம், ரியல் எஸ்டேட்,அரசுத் துறைகள் குடும்ப சொத்தாக மாறியதா இல்லையா?இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாததால் தான் திமுக விசாரணையை அரசியல் பழிவாங்கல் என்று மாற்ற முயல்கிறது.

அதே நேரத்தில்,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை.கொலை, கஞ்சா, போதைப் பொருள்,ரீல்ஸ் எடுத்து குற்றம் செய்யும் கலாச்சாரம்.இதெல்லாம் திமுக எதிரிகளின் கற்பனையா?இல்ல…மக்கள் தினமும் செய்திகளில் பார்க்கும் உண்மையா?இதற்கெல்லாம் டெல்லி காரணமா?அல்ல…சென்னையில் இருக்கும் ஆட்சி தான் காரணமா? இந்த சூழலில் தான்,எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.வசனம் பேசவில்லை. நிஜத்தை முன்வைக்கிறார்.“திராவிட மாடல்”என்ற பெயரில்,விளம்பரம்…போஸ்டர்…விழா…ஆனால் நிர்வாகம் எங்கே?பாதுகாப்பு எங்கே?பொது மக்கள் நிம்மதி எங்கே? இந்த கேள்விகள் திமுகவுக்கு எரிச்சலை தருகிறது.ஏனெனில்,இதற்கு பதில் இல்லை.

இன்னொரு பக்கம்,நடிகர் விஜய்.திமுக நினைத்தது போலஅவர் வெறும் distraction இல்லை.அவர் வந்ததால்,திராவிட அரசியலின் வாக்கு வங்கி பிளக்கப்படுகிறது.எல்லாரும் ஒரே மாதிரி தான்”என்ற மனநிலை உருவாகிறது.இதன் நேரடி லாபம் யாருக்கு?திமுகவுக்கு இல்லை.மாற்றத்தை பேசும் பாஜக போன்ற கட்சிகளுக்கே.

கூட்டணிக்குள் கூட திமுக நிம்மதியாக இல்லை.காங்கிரஸ் பேரம் பேசுகிறது.சிறிய கட்சிகள் கணக்கு போடுகின்றன.ஏனெனில்,திமுக வெற்றி உறுதி என்ற நம்பிக்கைஇப்போது அவர்களுக்கே இல்லை.மொத்தத்தில்,2026 தேர்தல்திமுகவுக்கு “அதிகாரம் தொடருமா?”என்ற கேள்வி அல்ல.“இத்தனை ஆண்டுகளாக நடந்த ஊழல்களுக்கும்,நிர்வாக தோல்விகளுக்கும்மக்கள் தீர்ப்பு என்ன?”என்ற கேள்வி.பாஜக இந்த தேர்தலில்வெறும் எதிர்க்கட்சி இல்லை.சட்டம், நேர்மை, நிர்வாகம்இந்த மூன்றையும் பேசும் மாற்று அரசியல்.பயமுறுத்தலால் அல்ல…பொய்யால் அல்ல…உண்மையால் தான் திமுகவின் கோட்டையை உடைக்கும் அரசியல்2026…இது தேர்தல் அல்ல.திராவிட மாடல் என்ற மாயைஉடைபடும் வருடம்.

Exit mobile version