இந்தியா முழுவதும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் சன் நெட்வர்க்கின் உரிமையாளர் கலாநிதி மாறன் 19,100 கோடி சொத்து மதிப்புடன் தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அளவில் கலாநிதி மாறன் 43- வது இடத்தை பிடித்துள்ளார்.
கலாநிதி மாறனின் அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் யார் ?
சன்டிவி வளர தொடக்ககால முதலீடு திமுக பணம், அவர்கள் இருந்த இடம் கட்சியின் முரசொலி அலுவலகம் கட்சியின் இன்னொருவனுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கும் என நம்பமுடியுமா?
கலாநிதி திறமையானவர் சந்தேகமில்லை, ஆனால் திமுக எனும் கட்சியும் அது கொடுத்த வாய்ப்பும் தொடக்கத்தில் இருந்தே அதிகம், இன்னொரு திமுகவினருக்கு கனவிலும் நினைத்து பார்க்கமுடியா வாய்ப்பு.
திமுக பணம், திமுக இடம் என முதல் கட்டமும்,முரசொலிமாறனின் மந்திரி பதவியும் அதை அடுத்து தயாநிதிக்கு கிடைத்த தொலைதொடர்பு அமைச்சகம் இன்னொருவனுக்கு அமையும் என கருதமுடியுமா?
இதெல்லாம் கலாநிதிமாறனின் பூர்வஜென்ம புண்ணியம், அதுதான் திமுகவினரை சுயமாக சிந்திக்கதெரிய அடிமைகளாக்கி திமுக எனும் ராக்கெட்டில் மாறன் குடும்பத்தை இவ்வளவு உயரவைத்திருக்கின்றது.
திருக்குவளை நகரத்தின் அடிமட்ட குடும்பம் அது, கலாநிதி மாறனின் அப்பா வழிதாத்தாவுக்கு சொல்லிகொள்ளும்படி சொத்தோ பதவியோ இல்லை, முரசொலிமாறன் கல்லூரியில் படிக்கும்பொழுது உதவி செய்தது ராம்சந்தர் என்பது அக்காலத்தில் மாறனே சொன்ன விஷயம்.
எந்த காங்கிரஸை 1960களில் பார்ப்பானிய கட்சி என்றார்களோ, எந்த பாஜகவினை 1980ல் ஆண்டி மடம், சாமியார் மடம் என்றார்களோ அவர்களோடு ஆட்சியில் அமர்ந்து 15 வருட காலம் சம்பாதித்தார்கள்.
இதெல்லாம் பெரியார் சொன்ன திராவிட பகுத்தறிவுக ருணாநிதி, முரசொலிமாறன் என இருவரில் கருணாநிதி மகா புத்திசாலி, ஆனால் வாரிசுகளில் மாறனின் வாரிசுகள் அதிமகா புத்திசாலி, திமுக சர்வாதிகார குடும்பம் அவர்களின் காலடி செருப்பு கூட வராது மொத்ததில் கலாநிதிமாறனுக்கு பூர்வ ஜென்ம பலன் அதிகம், அது பல இடங்களில் கைகொடுத்தது இன்னும் கொடுக்கலாம்.
ஆக முரசொலிமாறன் குடும்பத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்ட உபிக்கள் அடுத்து இன்பநிதி மற்றும் ஆதித்யா போன்றோரை அந்த இடத்துக்கு கொண்டுவர ராம்சாமி அண்ணா வழியில் கடுமையாக பாடுபடும்.
பாவம் அது அவர்களின் பூர்வ ஜென்ம கர்மாவின் பாவகணக்கு..
எதற்கெடுத்தாலும் அம்பானிடா, அதானிடா என கூச்சலிடும் திராவிட கும்பலை இப்பொழுது காணவே முடியாது.
கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















