தி.மு.கவின் அதிரடியான 10 நாட்கள்! மக்கள் சரவெடி கொ(தி)ண்டாட்டமா?

திமுக அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வெறும் கண் துடைப்பு இப்போது பெருவாரியான நகரங்களில் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுவதில்லை அப்படி இயக்கினாலும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிய அளவிலே பேருந்துகள் இயக்கப்படும், அந்த வகை பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசம். ஆனால் இவர்கள் தேர்தலில் கூறியது அனைத்து வகை பேருந்துகளிலும் இலவசம் என கூறி ஓட்டு வாங்கினார்கள்.

இந்த பக்கம் ஆம்புலன்சிற்கு கட்டணம் நிர்ணயம் செய்து இந்த இக்கட்டான நேரத்தில் ஏழைகளின் வயிற்றில் அடித்தார்கள் தி.மு.கவின் 4000 ரூபாய் அந்த ஆம்புலன்ஸ் க்கு சரியாகி விடும்…போல நிலைமை இருக்கு..
கடந்த பத்து வருசமா ஆளும் அரசை குறை மட்டுமே சொல்லி பழக்கப்பட்ட திமுக இன்றோடு ஆட்சிக்கு வந்து பத்து நாட்கள்தான் ஆகின்றன.இந்த பத்துநாட்களில் திமுக செய்த சாதனைகள் அது மக்களுக்கு வேதனை அளித்த வண்ணம் உள்ளது

கொரோனாவை ஒன்றரை வருடமாக எதிர்கொண்டு பழக்கப்பட்ட அனைத்து மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி ஆணையர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்.
பல மாவட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்.விளைவு கொரோனாவுக்கு எதிராக வீதிகளில் மருந்தடிக்கக்கூட ஆளிலில்லை.

முதல் 100யூனிட்களுக்கு மின்சார கட்டணம் இல்லை என்கிற முந்தைய அஇஅதிமுக அரசின் நலதிட்ட அறிவிப்பை சத்தமே இல்லாமல் ரத்து செய்துவிட்டனர். என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது இதனால் விளைவு கரண்ட் பில் எல்லோருக்கும் எக்கச்சக்கமா எகிறிறுக்கு. என்ற புலம்பல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டசிவர் மருந்தை நேரு ஸ்டேடியத்தில் வைத்து மூனுலட்சம் பேரை வரவைத்து நாளொன்றுக்கு 300பேருக்கு மட்டும் கொடுத்தனுப்பினர். அதுவும் முறையான சமூக இடைவெளி இல்லாமல்.. அதுவும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் அங்கு வந்து மருந்து வாங்க வந்தார்கள்.. அதுவும் கொரோன பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடும் என்பது கூட இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை. கேட்டால் 10 நாட்கள் தான் என சொல்லி நழுவி விடுகிறர்கள்.

இதெல்லாம் பரவாயில்லை கடைசியில் ரெம்டெசிவர் மருந்தே இல்லை அதுவெறும் கார்ப்பரேஷன் வாட்டர்தான் என்கிற அறிவிப்பை மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொரோனாவால் கொத்து கொத்தாக மடிந்த மக்களை எரிக்கமுடியாமல்,புதைக்க முடியாமல் கடைசியில் சுடுகாட்டுக்கு டோக்கன் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.ஊரடங்கை கடுமையாக்கினால் பொதுமக்களின் கோபப்பார்வைக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களை மயிலிறகால் வருடி கொரோனாவை பரப்ப துணைபோயினர். காவல் துறை தனது பணியினை செய்தால் அவர்களை இடம் மாற்றினார்கள்.

பதவியேற்ற முதல்நாளிலேயே ஏழைமக்கள் பசியாறிக்கொண்டிரருந்த ஒரே இடமான அம்மா உணவகத்தை சூறையாடினர் திமுகவினர். ஊடகப்பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து ஸ்டாலினை மட்டும் ஹைலைட் செய்யும்படி பார்த்து கொண்டனர்.அந்த வேலைகளை திறம்பட செய்தும் வருகின்றார்கள். ஊடகங்களின் முன்களப்பணியாளர்கள்.

ஸ்டாலின் விளம்பரம் செய்வதை விரும்பவில்லை என்பதையே விளம்பரமாக்கினார்கள் . நிவாரண நிதி பொருட்களில் ஸ்டாலின் விளம்பரம் இல்லை என சொல்லி ரேஷன் கடையினை திமுகவின் அலுவலகமாக மாற்றினார்கள்

கொரோனா நிவாரணநிதி 2000த்தை சமூக இடைவெளியின்றி,ரேஷன் கடையில் திமுக கட்சிக்கொடியை கட்டியும் வழங்கி வருகின்றனர்.தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஒரு படுக்கை கூட காலியாக இல்லை.

தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் பணம்பறிக்க லேசான கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன் பேர்வழி என்று அவர்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கி பணத்தை பறித்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு நிர்பந்திக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக கொத்து கொத்தாக மரணங்கள்.எரிக்க விறகில்லை,புதைக்க இடமில்லை .பத்தாண்டுகால அஇஅதிமுக ஆட்சியின் மகத்துவத்தை மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு பத்தே நாட்களில் உணரவைத்துவிட்டனர் திமுகவினர்.

Exit mobile version