மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன் பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை அரசு நடத்தியதா அல்லது தி.மு.க நடத்தியதா என தெரியவில்லை. அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என தான் பேசியுள்ளார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும்
அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு (2022 ஆகஸ்ட்) முன்பு, இந்திய டுடே எடுத்த சர்வேயில், 60 சதவீதம் வாக்குகள் பெற்று இதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்தார். அப்போது இந்தியா டுடே சர்வே பாருங்கள் என்று திமுகவினர் அதிகமாக கூறினார்கள். ஆனால் அதே 6 மாதங்கள் கழித்து ஜனவரி 26-ந் தேதி இந்தியா டுடே நடத்திய சர்வேயில், வெறும் 44 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளார்.
இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் 6 மாதங்களில் 16 சதவீதம் பின்தங்கியுள்ளார். அதனால் தான் அறிவாலையத்தில் உள்ள சகோதர சகோதரிகள் இந்தியா டுடே என்ற வார்த்தையை கேட்டால் அலறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் ஏற்கெனவே கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை ஆகும்.
எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தி.மு.க கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் இந்த கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் (தென்னரசு) பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.