ஓடவிட்ட வி.சி.க ஓட்டம் பிடித்த திமுக பிரமுகர் …குமரியில் சம்பவம்… ஒரே அசிங்கமா போச்சு குமாரு…புலம்பும் ஆளும் தரப்பு..

ஏற்கனவே திமுகவுக்கும் விசிகவுக்கும் வாய்க்கா தகராறு இதுல வறப்பு தகராறு வேற என்பது போல் கன்னியாகுமரியில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, திமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தார்.வி.சி.க இல்லாமல் திமுக ஜெயிக்காது என்றும் நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது 40 ஆண்டுகளாக இருக்கும் எனது தலைவர் ஏன் துணை முதலமைச்சர் ஆக முடியாதா என ஆதவ் அர்ஜுனா பேசியது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியது. அதன் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஆதவ்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றுவதில் திமுகவுக்கும் விசிகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது.மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இவ்வாறு தொடர்ந்து வாய்க்கா தகராறு இருக்கிறது

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பல மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அருமனை வட்டார கிறிஸ்தவ பேரவை இயக்க செயலாளரும், விசிக மாநில செயலாளருமான ஸ்டீபன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை அன்று அருமனை நெடுங்குளம் சந்திப்பில் நின்றிருந்த ஸ்டீபன், தனது ஆதரவாளர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது,தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்தும் திமுக அரசை பற்றியும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. அதை பார்த்த திமுக விவசாய அணி பொறுப்பாளர் பிரபு என்பவர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்ததும் ஸ்டீபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தான் பேசுவதையே படம் பிடிக்கும் அளவிற்கு தைரியம் உள்ளதா என கூறி, திமுக நிர்வாகியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார்.

அரை நிர்வாண கோலத்தில் அவரை சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். இந்த வீடியோ கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. விசிகவினர் தாக்கியதில் படுகாயமடைந்த திமுக பிரமுகர் பிரபு, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி பிரபு, அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.விசிக நிர்வாகி ஸ்டீபன் மீது, முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறிய பிரபு, தன்னை தாக்கியதுடன், தனது பைக்கில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மேல் மட்டத்தில் திமுகவுக்கு விசிக அடங்கி போகுது ஆனால் கீழ் மட்டத்தில் தலைகீழாக உள்ளது. ஒரு சிறிய கட்சியை சேர்ந்த பிரமுகர் ஆளும்கட்சியினரை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டிய சம்பவம் பஅப்பகுதியில் திமுகவினரிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது,இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகாரும் சென்றுள்ளது ஆனால் அதை பெரு பொருட்டாகவே பாரக்கவில்லையாம் ஆளும் தரப்பு. இந்த நிலையில் குமரி மாவட்ட அடிமட்ட திமுகவினர் மாற்று கட்சிகளிடம் அடைக்கலம் தேடி வருகிறார்களாம். இதற்கு காரணம் கூட்டணி கட்சியினரை திமுக தலைமை தட்டி வைக்கததே காரணம் என முக்கிய மாநில நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

Exit mobile version