தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால், அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது. திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது மேலும் போக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் குறித்து பேசியது தான். மேலும் அண்ணாமலை கூறிய பிறகுபோக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு ஊழல் தடுக்கப்ட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோக்கியமான ஆட்சியை தருவோம்’ என கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க. தொடர்ந்து ஊழல் செய்வதில் குறியாக இருக்கிறது.தி.மு.க. அரசை ‘கரப்ஷன்; கலெக் ஷன்; கட்மணி’ என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடக்கிறது.
உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியை தமிழக பா.ஜ. செய்து வருகிறது.அந்த வகையில் தான் மின்சார துறை ஊழல்கள் குறித்து கூறினேன். மின்சாரம் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதற்கான பணம் கொடுக்கும்போது கமிஷன் பெறப்படுகிறது என கூறினேன்.அதற்கான ஆவணங்களை கேட்டனர்; பணம் கொடுத்ததற்கான ஆவணங்களையும் வெளியிட்டு விட்டேன்.
உடனே ‘இதுதான் ஆதாரமா?’ என்று கேட்கின்றனர்.செய்யும் தவறை திருத்திக் கொள்ளாமல் விமர்சனத்துக்கு பதில் விமர்சனமாக கேள்வி கேட்டு பிரச்னையை மூடி மறைக்க பார்க்கின்றனர்.அதே மாதிரி தான் ‘போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு தீபாவளிக்காக கொடுக்கப்படும் ‘சுவீட் பாக்ஸ்’ பரிசை கமிஷன் தொகை பேசி அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கப் பார்க்கின்றனர்’ என குறிப்பிட்டேன்.
தவறு என்றதும் பிரச்னையாகி விட்டது. உடனே அரசு நிறுவனமான ஆவினில் வாங்க முடிவெடுத்து அறிவித்து விட்டனர். இந்த விவகாரத்தில் முதல்வரே தலையிட்டு உத்தரவிட்டுள்ளார்.அப்படியென்றால் முறைகேடு செய்ய தயாராக இருந்தனர் என்பது தானே பொருள்?தவறு நடக்க தடை போட்டு விட்டார் முதல்வர் என்றதும் பாராட்டினேன்.தவறு செய்யாமல் ஆட்சி செய்யட்டும்; அவர்களை பாராட்ட தயாராகத் தான் இருக்கிறோம்.
செய்வது அத்தனையும் தவறு; முறைகேடு. சொன்னால் மட்டும் கோபம் வருகிறது.தனியார் நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்து விட்டு அந்நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்க அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டு பல நுாறு கோடிகளை சம்பாதிக்க திட்டமிட்டனர். இதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.
அது தொடர்பான செய்தி வந்ததும் தி.மு.க. அரசின் மின் கொள்முதல் முறைகேடு என சொன்னேன்.இப்படித் தான் மின் துறை போக்குவரத்துத் துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல் நடக்கிறது. எல்லா விபரங்களையும் திரட்டி வைத்திருக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.