நான் ரெடி, நீங்க ரெடியா..? குடிபோதையில் திமுக பிரமுகர் குத்தாட்டம் வைரல்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் கணவர் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது நண்பர்களுக்குள் நடன போட்டி அரங்கேறி இருக்கிறது. இந்த போட்டியில் அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக நடனமாடி இருக்கின்றனர்.

திமுக ஒன்றிய கவுன்சிலர் கணவரின் நேரம் வந்தபோது அவருக்கு ‘நான் ரெடி, நீங்க ரெடியா?’ பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பாடலுக்கு செம உற்சாகமாக நடனமாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது

திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் "குடிபோதையில் நடனம்"

அந்த வீடியோவில் காரில் இருந்து வெளியே வரும் திமுக ஒன்றிய கவுன்சிலர் கணவர் ‘நான் ரெடி, நீங்க ரெடியா?’ செம ஸ்டெப் போடுகிறார். அவரது காரில் திமுக கொடி பறக்கிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள இணைய வாசிகள் அவர் குடிபோதையில் தான் ஆடுகிறார் என்று தெரிவித்து இருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version