கும்மிடிப்பூண்டி திமுகவின் பொது குழு உறுப்பினரும் ஒன்றியகுழு தலைவராக இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் குணசேகர் ஊரடங்கை மீறி பிறந்த நாள் விருந்து வைத்து கொரோனாவை பரப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவரும் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் இவர் இரு தினங்களுக்கு முன்பு தனது 50 வது பிறந்த நாளை ஆதரவாளர்களுடன் வெகு விமரிசையாக மாந்தோப்பு ஒன்றில் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
இவரின் பிறந்தநாள் விழாவில் ரவுடிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளார்கள். திருவள்ளுர் மாவட்டத்திற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் திமுகவை சேர்நத குணசேகர் 500 பேருக்கும் மது விருந்துடன் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தட்டு தட்டாக பரிமாறப்பட்டது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் முககவசம் இல்லாமலும் சமூக இடைவெளி இல்லாமலும் காணப்பட்டனர். உள்ளூர் அரசியல் பிரபலங்கள், ரவுடிகள் அதிகாரிகள் ஏராளமானோர் கும்பலாக பங்கேற்று குணசேகரின் பிறந்த நாள் விழாவை சீறும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்
இந்த விழா முடிந்த மறு நாள் காய்ச்சல் காரணமாக திமுகவின் குணசேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இரு தினங்கள் கடந்த நிலையில், குணசேகருக்கும், அந்த விழாவில் பங்கேற்ற பி.டி.ஓ ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதன் தொடர்ச்சியாக லேசான அறி,குறிகளுடன் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்து கொண்டவர்கள் என மொத்தமாக இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் குணசேகரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பிரியாணியை மது அருந்தியவர்கள் , தற்போது கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறோமா என்ற பதட்டத்தில் உள்ளனர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனோ நோய்தொற்றை பரப்பியதாக குணசேகர் உள்பட 50 பேர் மீது ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் அந்த மாந்தோப்பையும் இழுத்து பூட்டியுள்ளனர். அங்கு கிருமி நாசினி தெளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுக தலைவர் அரசாங்கத்தினை குறை சொவ்லவதை விடுத்து கட்சிகாரர்களை கண்டித்தால் கொரானாவிலிருந்து தமிழகம் விடுபடும் என மக்கள் கூற ஆரம்பித்துள்ளார்கள்.