முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர் மட்டம் 136 அடி இருக்கும் போதே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது. விடியல் அரசியலில் தமிழகத்தின் உரிமையை பறித்தது கேரளா.
எனவே பா.ஜ.க சார்பில் முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டம் நேற்றைய தினம் தேனி கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிடம் தமிழக உரிமையை விட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்” கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டியிட்டுவிட்டார் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில் முக்கியமானபிரதமர் மோடி கூறியதாக ஒன்றை தெரிவித்தார். பா.ஜ.க வின் உயர் அதிகாரமிக்க தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் பா.ஜ.க தேசிய தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.செயர்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உ.பி.முதல்வர் யோகி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா,ஜ,க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
பாஜகவில் செயற்குழு கூட்டம் எடுக்கும் முடிவு தான் அதிகாரமிக்கது. எனவே இக்கூட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. இந்த கூட்டத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவின் அரசியல் தீர்மானங்களை முன்மொழிந்தார் இந்த தீர்மானத்தினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழி மொழிந்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது பிரதமர் அண்ணாமலையிடம் ஊழல் யார் செய்தாலும் சரி அது திமுக கவுன்சிலர் மாவட்ட தலைவர் மந்திரி ஏன் கோபாலபுரம் குடும்பமாக இருந்தாலும் சரி அவர்களை எதிர்க்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். மாநில அரசு தவறு செய்தால் அதை உடனடியாக தட்டி கேட்க வேண்டும். மேலும் ஊழலை எதிர்த்து மக்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்துங்கள் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தற்போதே அண்ணாமலை அவர்கள் திமுகவின் ஊழலை வெளிகொண்டுவருகிறார், மின்துறை முதல் போக்குவரத்து துறை நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் வரை தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இதில் பிரதமர் உத்தரவு வேறு இனி ஆட்டம் தாறுமாறுதான்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















